பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெடடி 291 (3) விருந்தினர் மாளிகை : பல்கலைக்கழகம் விரிவிற்கேற்ப, வெளியிலிருந்து வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையும் பெருகத் தொடங்கியது. வருகின்றவர்கள் தங்குவதற்கும். உணவு கொள்வதற்கும் வசதிகள் இல்லாமல் தவித்தனர். தேவஸ்தான சத்திரங்கள், விருந்தினர் இல்லங்கள் கைகொடுத்து உதவினாலும் வாகன வசதியின்மையால் தொல்லைப்பட்டனர். பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்குவதற்கும் உணவிற்கும் ஏற்பாடுகள் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார் துணைவேந்தர் டாக்டர் ஜகந்நாத ரெட்டி. பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர் குடியிருப்பையொட்டி ஒரு விருந்தினர் மாளிகையை எழுப்பினார். குளியலறை கழிப்பறைகளுடன் அமைந்த தங்கும் அறைகள் குளிர்சாதனமுள்ள சில அறைகள், பலர் சேர்ந்தாற்போல் அமர்வதற்கேற்றவாறு வசதியுள்ள இரண்டு கூடங்கள் விருந்துகள் நடைபெறுவதற்கேற்ற உண்ணும் அறை - இத்தகைய வசதிகள் உள்ளன. இந்த மாளிகையில், இந்த விருந்தினர் இல்லம் கட்டுவித்ததுடன், ஒவ்வொரு சிறு விவரங்களிலும் தம் நேரான கவனத்தைக் கொண்டு செலுத்தியதுதான் பலருடைய பராட்டுக் குரியரானார் டாக்டர் ரெட்டி இந்த மூன்று தவிர இவரே திட்டம் வகுத்துச் செயற்படச் செய்தவை சில உள்ளன. அவையாவன : (1) மகளிர் விடுதி : மகளிர் தொகை பல்கலைக்கழகத்தில் பெருகி வருவதைக் கண்டார் துணைவேந்தர். தேவஸ்தானத்தைச் சேர்ந்த மகளிர் விடுதிக்குரிய கட்டடம் போதாதிருந்தது இது தொடக்கக் காலத்தில் பல்கலைக் கழகத்திற்குத் தரப்பெற்று விட்டது) இதனையொட்டி மிகவும் அழகான முறையில் மற்றோர் இரண்டுமாடிக் கட்டடத்தை எழுப்பச் செய்து அவர்கட்குத் தேவையான வசதிகளைப் பெருக்கினார். மகளிர் விடுதிகளில் மகளிர்க்கெனத் தனிப்பட்ட முறையில் தேவைப்படும் சுகாதார வசதிகட்கு வழியமைத்துத் தந்தார். சிறந்த மருத்துவரல்லவா? (2) ஆய்வுக் கூடங்கள் : பொறியியல் படிப்பு ஏட்டுச் சுரைக்காய் அன்று. மாணாக்கர்களின் எண்ணிக்கை பெருகியதாலும்,