பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 நீங்காத நினைவுகள் புதிய துறைகள் ஏற்படுத்தியதாலும் ஆய்வுக்கூடங்கள் தேவைப்பட்டன. இவற்றின் இன்றியமையாமையை உணர்ந்த துணைவேந்தர் மிக விரைவில் இரண்டு மூன்று ஆய்வுக் கூடங்களை எழுப்பித் தேவையான வசதிகள் கிடைக்கச் செய்தார். (3) ஆசிரியர் குடியிருப்பு : ஆசிரியர்கள் குடியிருப்பிற்கான பல்வேறு நிலை ஆசிரியர்கட்கேற்ற வீடுகள் அடங்கிய "பிரகாசம் நகர்" இவர்காலத்தில்தான் தோன்றியது. அஃது இன்று விரிவாகிக் கொண்டே வருகின்றது. பத்தாண்டுகள் இப்பல்கலைக்கழகத்தில் அநுபவம் பெற்றுள்ள ஆசிரியர்க்கு வீடுகள் தருவது போன்ற விதிகளை வகுத்துக்கொண்டு இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்பெற்றன. இந்த விதியின் கீழ் 10 ஆண்டுகள் அல்லலுற்ற அடியேனுக்கு ஓர் இல்லம் ஒதுக்கப்பெற்றது. (8. துணைப் பேராசிரியர் பகுதி, பிரகாசம் நகர் அதில் ஏழாண்டுகள் தங்கியிருக்கும் பேறு பெற்றேன். வழக்கமாகச் செய்யும் வேலைகளை விட இருமடங்கு பணிகள் செய்ய முடிந்தது. துறையிலும் இல்லத்திலும் ஆய்வு மாணவ்ர்க்கான பணி மும்முரமாக நடைபெற இந்த வசதிகள் துணைசெய்தன. (4) பொறியியல் கல்லூரி 2-வது உணவு விடுதி ! பொறியியல் மாணவர்களின் தொகை பெருகிக் கொண்டே போனதால் இன்னொரு விடுதி தேவைப்பட்டது. விரைந்து செயலாற்றி அதைத் தோற்றுவித்தார். மருத்துவக் கல்லூரி பொறியியற் கல்லூரி மாணவர்களின் வகுப்பு முற்பகல் எட்டு மணிக்கே. தொடங்குவதால் விடுதி, இiர்க்ட்கு மிகவும் இன்றியமையாதது என்பதை அவர்கள் பணியை நேரில் அறிந்தவர்கள்தாம் அவர்களின் தேவையை உணர முடியும். & நினைவு - 7 : "நன்றி மறப்பது நன்றன்று" என்ற பொன்மொழியை நன்கறிந்து செயற்படுபவர் டாக்டர் ரெட்டி ஆந்திர கேசரி பிரகாசம் அவர்களின் செயற்பாட்டால் உருவானது திருவேங்கடவன் பல்கலைக்கழகம். அது போலவே முதல் துணைவேந்தர் கோவிந்தராஜுலு நாயுடு அவர்களின் 14 ஆந்திர கேசரியின் தொண்டின் நினைவாகச் சூட்டப்பெற்ற பெயர்.