பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் P. ஜகந்நாத ரெட்டி 293 செயற்பாட்டால் விரைந்து வளர்ந்தது பல்கலைக்கழகம். இவர்கள் இருவருக்கும். நன்றி செலுத்தும் பாங்கில் நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் டாக்டர் ரெட்டியின் திருவுள்ளத்தில் எழுந்தது. இந்த எண்ணம் செயற்படுத்துவதில் இராயர் சீமைப் பெருமக்கள் பங்கு கொள்ள வேண்டும் என்று கருதினார் துணைவேந்தர். ப்ல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பங்கும் இதில் இருக்க வேண்டும் என்றும் கருதினார். கல்லூரி முதல்வர்களின் கூட்டம் இருந்தபோது ஒவ்வொரு மாணவனும் ஒரு ரூபாய் வீதம் வழங்குவதில் சிரமம் இராது என்று கருதி இத்திட்டத்தை அவர்களின் முன் வைத்தார். அவர்கள் இதனை ஒருமனதாக ஒப்புக் கொண்டனர். திட்டம் செயற்பட்டதால் பல ஆயிரம் வெண் பொற்காசுகள் குவிந்தன. இரு பெரியாருக்கும் வெண்கலச் சிலைகள் உருவாயின. ஆந்திரகேசரியின் சிலையை பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தின் முகப்பில் நிறுவி சஞ்சீவிரெட்டி பவனத்திற்கு ஒரு பொலிவினை ஏற்படுத்தினார். பல்கலைக்கழகத்திற்கு விதைபூன்றிய பெரியாரின் சிலை இங்கு அணிசெய்வதுதானே பொருந்தும்? - துணைவேந்தர் கோவிந்தராஜுலு, நூலகம் பல்கலைக் கழகத்தின் இதயம் போன்றது என்று கருதியவர். ஒவ்வொரு சிறுசிறு விவரங்களிலும் தம் கருத்தைச் செலுத்தி வளர்த்தவர். அந்தக் கலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் திரு. நாயுடு அவர்களின் சிலை அணி செய்கின்றது. பொருத்தமாக அமைப்பதில் டாக்டர் ரெட்டிக்கு டாக்டர் ரெட்டியே நிகர். திரு. நாயுடு அவர்கள் பணியைவிட்டு விலகும்போது அவருக்காக ஏற்படுத்தப் பெற்ற விழாவில் வெள்ளியாலான நூலகக் கட்டடத்தின் உருவம் அவருக்கு நினைவுச் சின்னமாக அளிக்கப் பெற்றதை ஈண்டு நினைவுகூரலாம். நினைவு - 8 : துறை வளர்ச்சியிலும், ஆசிரியர்களின் நியமனத்திலும் டாக்டர் ரெட்டியின் போக்கு சரிவர அமையவில்லை. எல்லா நிலைகளிலும் அவருடைய தனி முரண்பாடு (Idiosyncrsy) பளிச்சிட்டுக் காட்டியது. தமிழ்த்துறைகட்குப் பேராசிரியர்-1, o