பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 நீங்காத நினைவுகள் துணைப் பேராசிரியர்-I விரிவுரையாளர்-1 தேவை என்று விளம்பரம் செய்யப் பெற்றிருந்தது. (1 பேராசிரியருக்கு பத்தாண்டுகள் எம்.ஏ. வகுப்பு கற்பித்த அநுபவம், டாக்டர் (Ph.D) பட்டம், ஆய்வு மாணவர்கட்கு வழிகாட்டிய அநுபவம் இருக்க வேண்டும் என்றும் 12 துணைப்பேராசிரியருக்கு 5 ஆண்டுகள் எம்.ஏ. வகுப்பிற்குப் பயிற்றிய அநுபவம். டாக்டர் பட்டம், வழிகாட்டிய அநுபவம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் என்றும். 3 விரிவுரையாளர் பதவிக்கு முதல் அல்லது இரண்டாவது வகுப்பில் தேறியிருக்க வேண்டும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிடப் பெற்றிருந்தன. நானும் துணைவேந்தரும் பேசிக்கொண்டிருந்தபோது டாக்டர் மு. வரதராசனைத் தவிர தமிழகத்தில் இத்தகுதிகள் பெற்றவர்கள் ஒருவருமே இலர் என்று தெளிவாக்கிவிட்டேன். . எனினும் துணைவேந்தர் அண்ணாமலை, சென்னை, மதுரைத்துணைவேந்தர்கட்கு எழுதிப் பேராசிரியர் பதவிக்கு ஒருவரைப் பரிந்துரைக்குமாறு கேட்டிருந்தார். மூவரும் மறுமொழி தந்திருந்தனர். ஒருநாள் துணைவேந்தர் என்னை அவர் அறைக்கு வருமாறு சொல்லியனுப்பியிருந்தார். மூன்று துணைவேந்தர்களின் கடிதங்களை என்முன் வைத்தார் (1) அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆதிநாராயணா தந்த மறுமொழி: "இந்தப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அ. சிதம்பரநாதனைத் தவிர பேராசிரியர்கள் ஒருவருக்குமே டாக்டர் பட்டம் இல்லை. டாக்டர் சிதம்பரநாதனும் அண்மையில் இறந்துவிட்டார். இந்தப் பல்கலைக்கழகம் மூலம் டாக்டர் பட்டம் பேற்றவர்கள் ஒருவருமே இலர்" என்று; 2 சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு நெது. சுந்தரவடிவேலு எழுதியது : இப்பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வகுப்புகள் இல்லை. கற்பித்தலும் இல்லை. தமிழ்த்துறையில் டாக்டர் மு.வ. ஒருவரே டாக்டர் பட்டம் பெற்றவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மட்டிலும்தான் எம்.ஏ. வகுப்பு நடைபெற்று வருகின்றது. அங்கு வித்துவான் பட்டம் பெற்றவர்கள்கூட எம்.ஏ. வகுப்பு கற்பிக்க அநுமதிக்கப்பெற்றுளர். ஆகவே, தாங்கள் கருதுகிறபடி ஆட்கள் இல்லை. அங்குள்ள டாக்டர் சுப்பு ரெட்டியார் பிஎச்.டி பட்டம்