பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ம. ஜகந்நாத ரெட்டி - - 295 பெற்றவர் தரமான பன்னூல்களைப் படைத்தவர். அவரைக் கொண்டு காலத்தை ஒட்ட வேண்டியதுதான்" என்றும் (3) மதுரைப் பல்கலைகழகத் துணைவேந்தர் திரு. தொ.பொ.மீ எழுதியது. டாக்டர் மொ.அ.துரையரங்கனார், டாக்டர் T.E. ஞானமூர்த்தி, அச. ஞானசம்பந்தம், டாக்டர் க. ஆறுமுகனார் என்ற நான்கு பெயர்களைக் குறிப்பிட்டு "இவர்கள் தகுதியானவர்கள்" என்று எழுதிவிட்டார். முகவரி கூடத்தரவில்லை." டாக்டர் ரெட்டி இவர்களைப்பற்றி விவரம் தருமாறு என்னைக் கேட்டார். (1) டாக்டர் மொ.அ. துரைஅரங்கசாமி. இவர் டாக்டர் பட்டம் பெற்றவர். ஓராண்டு பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. கற்பித்ததாக நினைவு. மதுரை தியாகராஜர் கல்லூரியில் இவர் பணியாற்றியபோது அங்கு எம்.ஏ. வகுப்பு நடைபெறவில்லை. சில ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இங்கும் எம்.ஏ. வகுப்பு இல்லை. அப்போதுதான் டாக்டர் பட்டம் பெற்றார். மதுரைப் பல்கலைக்கழகம் தொடங்கப் பெற்றபோது அங்குச் சில ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். வழிகாட்டும் அநுபவம் இல்லை. ஒய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற குறிப்பு விளம்பரத்தில் இல்லை. (2) டாக்டர் I.E. ஞானமூர்த்தி, இவர் பூசாகோ கலைக்கல்லூரியில் கோவை பணியாற்றுபவர். இவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும் ஆறு திங்கள்களே உள்ளன. இவருக்கும் எம்.ஏ. கற்பித்த அநுபவம் ஆறு திங்களே. வழிகாட்டிய அநுபவம் இல்லாதவர். (3) அ.ச. ஞானசம்பந்தம்; இவர் பல்லாண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் சென்னை பணியாற்றியவர். பத்து ஆண்டுகள் எம்.ஏ. வகுப்பு கற்பித்தாரா என்று சொல்ல முடியாது. ஆசிரியப் பணியைத் துறந்து சில ஆண்டுகள் சென்னை வானொலியிலும் சில ஆண்டுகள் அரசு தமிழ் வெளியீட்டுக் கழகத்தில்" செயலாளராகவும் பணியாற்றியவர். 15 டாக்டர் ஞானமூர்த்தியையும். டாக்டர் ஆறுமுகனாரையும் விண்ணப்பம் அனுப்புமாறும் தூண்டி விட்டதைப் பின்னர் அறிந்தேன். முன்னவர் விண்ணப்பம் அனுப்பினார். பின்ன்வர் ஏனோ அனுப்பவில்லை.