பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 நீங்காத நினைவுகள் மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஒராண்டு காலமாகப் பணியாற்றுபவர். டாக்டர் பட்டம் இல்லாதவர். வழிகாட்டிய அநுபவமும் இவருக்கு இல்லை. A டாக்டர் க. அறுமுகம் : டாக்டர் பட்டம் பெற்றவர். எம்.ஏ. கற்பித்த அநுபவம் வழிகாட்டிய அநுபவம் இல்லாதவர். தில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர். ஒருகால் இந்தி எம்.ஏ. மாணவர்கட்குத் தமிழ் கற்பித்த அநுபவம் இருக்கலாம். இவ்வாறு கூறித் துணைவேந்தரிடம் விடை பெற்றேன். அவரும் எனக்கு நன்றி தெரிவித்தார். டாக்டர் ரெட்டி விதிவரம்புகளில் நிற்பவர் நேர்மையானவர் மறைமுகமாகவோ, வஞ்சகமாகவோ ஒன்றும் செய்யார் உள்ளத்தில் "அழுக்கு" இருந்திருந்தால் இக்கடிதங்களை எனக்குக் காட்டியிரார் என்பது அடியேனின் கருத்து. நினைவு - 9 : பேராசிரியர் பதவிக்கும் பிறவற்றிற்கும் மூவரே விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர். ஒருவர் டாக்டர் TE ஞானமூர்த்தி; மற்றொருவர் G. தாமோதரன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூன்றாவதாக அடியேன். வல்லுநர் குழுவில் டாக்டர் மு.வ.வும் திரு. தெ.பொ.மீயும் ஆகிய இருவரும் இருப்பதாக அறிந்தேன். டாக்டர் TE. ஞானமூர்த்திக்கு மட்டிலும் பேட்டிக்குரிய அழைப்பு அனுப்பப் பெற்றது. அடியேனுக்குக் கடிதம் வரவில்லை. நியமனத்தில் ஒரு பெரிய சூழ்ச்சி இருப்பதாக எனக்குப் பட்டது. டாக்டர் T.E. ஞானமூர்த்தியைப் பேராசிரியராகவும், திரு. G. தாமோதரனைத் துணைப்பேராசிரியராகவும் அமர்த்தி அடியேனை இருக்கிற நிலையிலேயே விரிவுரையாளராகவே விட்டுவைக்க ஒரு சதித்திட்டம் இருப்பதாக ஊகிக்க முடிந்தது. துணைவேந்தருக்குக் கடிதம் அனுப்பித் தனியே பேச இசைவு வேண்டினேன். இசைவு தரப்பெற்றது. உரையாடல் நடைபெற்றது. பேட்டியில் துணைவேந்தரின் ஆணவத்தின் கொடுமுடியைக் காணமுடிந்தது. அவரும் என்னைப் "பனங்காட்டு நரி" என்பதைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். நிர்வாகம் இழைக்கும் அநியாயத்தைப் படிப்படியாக எடுத்துக்காட்டி பேட்டி உரிமை மறுக்கப்பெற்றால் ஐதாரபாத் உயர்நீதி மன்றத்தில் உரிமை மனு (Writ petition) தாக்கல் செய்து நீதி பெறுவேன் என்று சொன்னதும்