பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 நீங்காத நினைவுகள் நினைவு 15 : இரண்டாவது முறை டாக்டர் D. சகந்நாத ரெட்டியின் பதவி எளிதாக வரவில்லை; பல்வேறு சாணக்கியங்கள் செய்து பார்த்தார். பருப்பு வேகவில்லை. இதனால் மனத்தளர்வுற்ற துணைவேந்தர் இலேசான மாரடைப்பு நோயால் தாக்கப்பட்டு ஒரு திங்கள் படுக்கையில்கிடந்தார். நான் சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்தேன். தெய்வ சங்கற்பத்தினால் மீண்டும் மூன்றாண்டுக் காலப் பதவி வந்தது. விரைவில் உடல்நிலையும் தேறிப்புத்துயிர் பெற்றார்: புத்துணர்ச்சியுடன் இயங்கிச் செயற்பட்டார். ஒவ்வொரு செயலையும் 'தவம்" எனக்கருதி பக்தியுடன் செய்துவந்தார். உளவியல் துறையில் பல்லாண்டுகள் விரிவுரையாளராகவும், துணைப்பேராசிரியராகவும் பணியாற்றிய டாக்டர் எஸ். நாராயண ராவுக்கு பதவி உயர்வு தராமல் "இழுபறியாக வைத்திருந்தார் டாக்டர் ரெட்டி இதனால் டாக்டர் ராவ் மனம் உடைந்து போனார். இதய நோயால் கடுமையாகத் தாக்கப்பெற்று ஒன்றிரண்டு மாதங்கள் படுக்கையாகக் கிடந்தார். துணைவேந்தர் டாக்டர் ரெட்டி இதனை அறிந்தார். உடல் நோயைத் தெரிந்து கொள்ளும் அறிவு படைத்தவர் - இவர் நோய்க் கூறுமருத்துவர் (Pathologist) உளநோய்க் கூறுகளையும் அறிந்திருக்க வேண்டும். வாழ்க்கையில் நல்ல அநுபவம் மிக்க அறிஞர்களும் இத்தகைய நிகழ்ச்சிகளைக் கண்ணுறுங்கால் இவற்றின் மூலகாரணத்தை நன்கு அறியமுடியும் போது மருத்துவத்துறை அறிஞருக்கு இதனை, அறியமுடியவில்லை என்று சொல்லுதற்கில்லை. அறிந்து கொண்டார் இல்லம் சென்று டாக்டர் ராவைப் பார்த்து வந்தார். சில திங்களில் டாக்டர் ராவுக்குப் பதவி உயர்வு கிடைத்தது. உள்ளம் திருப்தி அடைந்தது. நோயும் நீங்கி விரைவில் குணமும் அடைந்தார். மனத்திண்மை இல்லாதவர்கள் சிறிய அதிர்ச்சியாலும் மனம் உடைந்து போவர் என்பதற்கு டாக்டர் ரெட்டியும், டாக்டர் ராவும் நல்ல எடுத்துக்காட்டுகளாக அமைகின்றனர். - - உள்ளத் தூய்மையும் நிர்வாகத் திறமையும் மிக்க டாக்டர் ரெட்டியின் காலத்தில் அதிகமாகத் துன்பப்பட்டவன் அடியேன். இதனை ஏழுமலையான் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.