பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி 305 ஆங்கிலப் பேராசிரியர்களே மூக்கில் விரலை வைத்துப் பாராட்டும் முறையில் அமைந்தது. பேச்சு முடிந்து டாக்டர் குழந்தைசாமி இருக்கையில் அமருகையில் துணைவேந்தர் அவர் கையைக் குலுக்கினபோது, அவர் கையையே தனியாகப் பிரித்துவிடுவார் போலிருந்தது. அவ்வளவு வலிவுடன் குலுக்கினார். டாக்டர் குழந்தைசாமியின் உரை தனிச்சிறப்புடன் திகழ்ந்ததை அனைவரும் பாராட்டினர். நான் துணைவேந்தருக்குக் குழந்தைசாமியை அறிமுகம் செய்தபோது சாதாரணமாக மலராது இருந்த அவரது முகம் உரைமுடிந்தபோது மலர்ச்சியுடன் - ஒளியுடன் - ஒளிர்வதைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றாகப் பேசும் துணைவேந்தரின் மனம் நன்றாகப் பேசின டாக்டர் குழந்தைசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டதில் வியப்பில்லை. பாம்பின் கால் பாம்பு அறியுமன்றோ?" நினைவு - 14 : "அம்புலிப் பயணம்" என்ற நூலை டிசம்பர் 1975 வெளியிட்டேன். இதனை டாக்டர் D. ஜகந்நாத ரெட்டிக்கு நன்ளிரு வரிடையே முளைத்தசெஞ் சுடர்போல் நலமுறத் தோன்றிய சீலன் ஒள்ளிய அறிவின் நற்பய னாய ஒழுக்கமும் திறமையும் பெற்றோன்; தெள்ளிய உளத்தன் பல்கலைக் கழக செவ்விய இத்யமே போல்வான்; விள்ளுறும் புகழான்; சீர்செக நாத வேந்தனுக் குரியதிந் நூலே என்ற அழகிய பாடலால் அன்பு படையலாக்கி மகிழ்ந்தேன். இந்நூல் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையின் ஆதரவில் நடைபெற்ற ஒரு வெளியீட்டு விழாவில் (ஏப்பிரல் - 1974) இதன் முதற்படியை இவரது துணைவியார் திருமதி இலக்குமி - ஜகந்நாத ரெட்டி பெற்றுக் கொண்டார்கள். இந்த விழாவில் டாக்டர் எம். அனந்த சயனம் அய்யங்கார் (முன்னாள் சபாநாயகர், முன்னாள் பீகார் மாநில ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் M.K. இராமகிருட்டிணன் பதிவாளர் நூலை வெளியிட்டார்.