பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 நீங்காத நினைவுகள் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. திரு பலராம ரெட்டியைப் ஆட்சிக்குழு உறுப்பினர் பார்க்கும் போதெல்லாம் திரு A.C.சுப்பா ரெட்டியைப் துணை முதல்வர் பார்த்துப் பேசினீர்களா?" என்று நச்சரிதத்தை நான் அறிவேன். தவிர, திரைமறைவில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பிறரும் "கிசுகிசுத்தது" என் காதிற்கும் எட்டியது. இப்போது தெலுங்கர்களை அதிகமாகப் போற்றவில்லை. அவர்கள்மீது அன்பும் இல்லை என்பது அவரது நடவடிக்கைகளால் புலனாயிற்று. அவரது நனவிலி உளத்தில் என்ன எண்ணம் ஓடியது என்பதை டாக்டர் மாத்ருபூதம் அண்ணாநகர் என்ற உளவியல் மருத்துவரால்தான் உறுதி செய்ய முடியும். இந்தக் குழப்பநிலையிலிருக்கும்போதுதான் நாவலரை அழைக்க இணங்காதிருந்தார். நானும் பொறுமையாகத் தேதிகளைத் தள்ளி வைத்துக் கொண்டே அவர் படம் எடுத்து ஆடுவதற்கேற்ப மகுடி ஊதி என் கருத்துக்கு இசைவு பெற்றேன். சென்னைக்கும் காவடி எடுத்து நாவலரை இணங்க வைத்தது பெரும்பாடாய்ப் போய்விட்டது. அவரைக் கொண்டு கருத்தரங்கும் தொடங்கப் பெற்று இனிதாய் முடிந்தது. இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிடுவது பொருத்தமாகும். டாக்டர் W.C. குழந்தைசாமியை அப்போது அவர் தொழில்துறைக் கல்வி இயக்குநர்" துணை வேந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது அவர் அந்த அறிமுகத்தைச் சுவைக்க வில்லை" என்பது அவர் முகத்தில் தெரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லவா? டாக்டர் W.C. குழந்தைசாமி உரை அற்புதமாக அமைந்தது. ஆராய்ச்சிக் கருத்துகள் நிரம்பி வழிந்தன. பேச்சின் பளிச்சிட்ட சொல்வளம் (Diction) வாக்கிய அமைப்பு. ஆங்கிலத்தை மிக எளிதாகக் - லாவகமாகக் கையாண்ட முறை இவை யாவும் 23 திரு. G. லீலா கிருஷ்ணனால் (S.V. கலைக்கல்லூரி தாவர இயக் பேராசிரியர் அறிமுகமானவர். கருத்தரங்கில் இளங்கோ படத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தியவர் - -