பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் P. ஜகந்நாத ரெட்டி 303 இந்தக் கருத்தின் அடிப்படையில் டாக்டர் ரெட்டியின் உளத்தைக் காண என் மனம் எண்ணியது. தொடக்கக் காலத்தில் நாவலரை ஆதரித்த அவரது உள்ளம் அவர் இரண்டாவது காலத்துணை வேந்தர் பதவியின் போது நாவலரை ஆதரிக்காததற்குக் காரணம் என்ன? தெலுங்குமொழி பேசுபவராகவும் தெலுங்குமொழி பயின்றவராகவும் உள்ள டாக்டர் ரெட்டி தமிழகத்தில் பிறந்தவர் திருத்தணி வட்டத்திலுள்ள வீரணல்லுர்): தமிழகத்தில் வளர்ந்தவர்; மருத்துவக் கல்வி சென்னையில் (M.B.B.S. M.D) பயின்றவர். போரில் பணியாற்றிய சலுகையினால் விசாகப் பட்டினம் குண்டூர் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர். சில ஆண்டுகள் பணியாற்றித் தம் திறமை, நேர்மை, ஒழுங்கு முறை இவற்றை நிலை நாட்டியவர். புதுச்சேரியில் மைய அரசு ஜவஹர்லால் மருத்துவர் கல்வி ஆராய்ச்சிநிலையம் தொடங்கினபோது இவருடைய திறமை முதலி யவற்றுடன் போர்ப்பணி அநுபவமும், கைகொடுத்து உதவியதால் அதன் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார் திரு. K.N. ராவ் அவர்களின் ஆசியால்). அதன் வளர்ச்சிக்கும். பெருமைக்கும் அரும்பாடுபட்டு உழைத்தவர். ஆந்திரத்தில் பணியாற்றியபோது சில அரசியல்வாதிகள், பெரியவர்கள் இவர்களின் நட்பைப் பெற்றிருக்கலாம். இவரது திறமையும் நேர்மையும் அவர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கலாம். இதனால் துணைவேந்தர் பதவி திருப்பதியில் கிடைத்தது. அதனை அற்புதமாக வகித்து அரும்பணி ஆற்றினார். இக்காலத்தில் அவர் தம்மை ஆந்திரர் என்று காட்டிக் கொள்ளும் போக்கில் அரசியல்வாதிகள் பேசும் பாணியில் பேசி வந்ததை என்னால் காண முடிந்தது. கால தேச வர்த்தமானத்தின் காரணமாகப் புதிய துறைகள் நான்கையும் தமிழ்த்துறை உட்பட ஆந்திர அமைச்சர் ஒருவர் திறந்து வைத்தார். இக்காலத்தில் சில ஆந்திர அரசியல்வாதிகளின் "விருப்புக் கானத்திற்குச் சரியாகத் தாளம்போடாது நேர்மையான போக்கில் செயற்பட்டதால் அவர்களது விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கலாம். - முதலில் துணைவேந்தர் பதவி சிரமம் இல்லாமல் வந்தது. இரண்டாவது காலப்பகுதி மூன்றாண்டுகள் அது கிடைக்க பகீரதப்