பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 நீங்காத நினைவுகள் உளவியலறிஞர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இக்கருத்து முற்றிலும் மாறிவிட்டது. நனவுநிலை (Conscious level), Bamaulafiana (Sub - Conscious level) [56T6%jálana (Unconscious level) என்று உளம் முப்பகுதிகளாகச் செயற்படுவதாகக் கூறுகின்றார். ஃபிராய்டு. இக்கருத்தினை உளவியலறிஞர்கள் அனைவரும் ஒரு மனத்துடன் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த உளநிலைகளை விளக்குவதற்கு வில்லியம் ஜேம்ஸ் (William James) என்ற உளவியலறிஞர் ஓர் அரிய உவமையைக் கையாளுகின்றார். வடபெருங்கடலினின்றும் (Arctic ocean) பெரும் பனிக்கட்டி மலைகள் விடுபட்டு அட்லாண்டிக் மாபெரும் கடலில் புகும். இம்மலைகளின் கொடுமுடிகளின் எட்டில் ஒரு பகுதியே புறத்தே புலனாகும். பனிக்கட்டி மலையொன்றினை முழு மனத்துடன் ஒப்புமைப்படுத்திக் கூறும்பொழுது சிறிதளவு தோன்றும் கொடுமுடியை நனவு உள்ளத்தோடு ஒப்புமை கூறலாம். அங்ங்னம் நிலையாகத் தோன்றும் பகுதிக்குக் கீழேயுள்ள சிறு பகுதி சுற்றியுள்ள அலைவீச்சினால் ஒரளவு தோன்றியும் வரும். இதனை நனவடி உளத்துடன் ஒப்புமை கூறலாம். இதற்குக் கீழாக பெருமலைபோல் கிடக்கும் பகுதி தாக்கினால் பெருங்கப்பல்களும் அச்சுவேறு. ஆணிவேறாகச் சிதையக் காண்கின்றோம். இதனை நனவிலி யுளத்திற்கு ஒப்பிடலாம். நனவுளம் முழு உளத்தில் கோடியில் ஒரு பங்கே என்றும் கூறிவிடலாம். புறக்காற்றாலும் பிறவற்றாலும் இந்தப்பனிக்கட்டி மலை தலைகீழாகப் புரள்வதும் உண்டு. அதுபோலச் சில சமயம் நனவிலியுளமும் நனவு உளமாக மாறுவதும் உண்டு. இத்தகைய உளமாற்றம் சிறுகச் சிறுகவும் எழலாம் திடீர் என்றும் நேரிடலாம். எப்படிப் பனிக்கட்டிமலையில் (ice-berg) பெரும்பகுதி புறத்தே நீரின் அகத்தே ஆழ்ந்துள்ளதோ, அதே போன்று நனவிலியுளமும் நனவு உள்ளத்திற்கு அடிப்படையாக உள்ளது. புறத்தே தோன்றும் பனிக்கட்டியின் பகுதியும், நீரில் ஆழ்ந்து கிடக்கும் அதன் அடிப்பகுதியும் ஒரே மலையின் இருபகுதிகள் என்பது வெளிப்படை அங்ங்ணமே நனவு உளமும், நனவிலி உளமும் ஒரே உள்ளத்தின் இருபகுதிகளாகும் என்பது கருதத்தக்கது. .