பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி 301 இரு ஆங்கிலப் பேராசிரியர்கள். இருவரும் பதிப்பிக்கும் அநுபவம் இல்லாதவர்கள். இதனை மதிப்புரை வழங்கியவரே குறிப்பிட்டுள்ளார். அனைத்தையும் தொகுத்து வெளியிடுவதற்குப் பதிலாக தக்கமுறையில் ஆய்ந்து தகுதியில்லாதவற்றை நீக்கி தகுந்தவற்றை மட்டிலும் வெளியிட்டிருந்தால் நூல் சிறப்பாக அமைந்திருக்கும் என்றும், இலக்கணப் பிழை, வாக்கியப் பிழை மலிந்து காணப் பெறுகின்றன என்றும் சுட்டியுள்ளார். இவற்றைத் தவிர்த்து நோக்கினால் டாக்டர் ரெட்டியின் பொறுப்பிற்கு எடுத்துக்காட்டான நினைவுச்சின்னமாகத் திகழ்கின்றது இந்நூல் எனலாம். நினைவு - 13 : டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி காலத்தில் தமிழ்த் துறையின் ஆதரவில் "திருக்குறள் கருத்தரங்கு" 1973-74 "சிலப்பதிகாரக் கருத்தரங்கு" (1974-75 என்ற இரண்டு கருத்தரங்குகளை நடத்தினேன். சிலம்புக் கருத்தரங்கிற்கு மாண்புமிகு கல்வி - நிதியமைச்சர் திரு. V.R. நெடுஞ்செழியனை அழைக்க நினைத்தேன். என் கருத்தைத் துணைவேந்தரிடம் அறிவித்தேன். அவர் அதற்கு இணங்கவில்லை. தமிழ்த்துறை தொடங்குவதற்கு முன் தமிழக அரசின் மானியம் வந்த நாள் தொட்டு செப்டம்பர் 1969 - துறையைத் தொடங்கி வைக்க நாவலரைத்தான் அழைக்க வேண்டும் என்று பல கூட்டங்களில் பறைசாற்றிக் கொண்டிருந்த துணைவேந்தரின் உள் எண்ணத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவரையும் அறியாமல் அவர்மனம் செயற்படுகின்றது என்பது எனக்குப் புரிந்தது. இதனை எழுதும்போது எல்.டி பயின்றபோதும், அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியபோதும் உளவியல் நூல்களில் என் உள்ளத்தைப் பறிகொடுத்துக் கற்றபோது மனநிலைகளைப்பற்றிப் படித்த ஒரு கருத்து நினைவிற்கு வருகின்றது. நீண்ட காலமாக மக்கள் உளத்திலுள்ள நணவுப் பகுதியை மட்டிலுமே உளம்" என்று கருதிவந்தனர். இன்று "ஃபிராய்டு" என்ற 21. ட்ாக்டர் நெது. சுந்தரவடிவேலு கட்டுரை - 9) காண்க. 22. நினைவுக்குமிழிகள் - பகுதி - 4 குமிழி 209 காண்க