பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3]{} நீங்காத நினைவுகள் புண்ணியத்தின் புகலிதெனப் புகழும் வெற்பு பொன்னுலகின் போகமெலாம் புனர்க்கும் வெற்பு விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு: வேங்கடவெற்பென விளங்கும். வேத வெற்பே" நினைவு 12 டாக்டர் ஜகந்நாத ரெட்டி மிக நன்றாக, பேசுபவர் எந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் பேசவேண்டி பொருளை தன்கு சிந்தித்து, தேவைப்பட்டால் நூலகத்தில் பொருத்தமான நூல்களைப் பெற்று. அவற்றை நன்றாகப் பயின்று பொருளை நிரல்பட அமைந்துக் கொண்டுதான் பேகவான். தம் வாழ்க்கையில் பல்வேறு பொறுப்பில் இருந்தபோது பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசிய பேச்சுகளையெல்லாம் பெரியவை சிறியவை என்று வேறுபாடு கருதாமல் தொகுத்துப் பாதுகாப்புடன் வைத்திருந்தமையே. அவர்தம் தனித்தன்மையைப் பொறுப்பைக் காட்டுகின்றது. இப் பேச்சுகளைத் 82 தொகுத்து Challergesin Higher Education என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார் 1972. இந்த நூல் அவர்தம் கல்விசார்ந்த அக்கறையைக் (Academic interest) காட்டுகின்றது. பல்கலைக் கழக வெளியீடாக வந்த இதனை அவருக்குப் பல்வேறு நிலைகளில் பணியாற்ற வாய்ப்பையும் வசதிகளையும் நல்கிய வேங்கடத்து அப்பனுக்கு’ப் பக்திப் படையலாக்கியுள்ளார். அந்தப்பெருமானின் திருவுருவப் படம் நூலி னை அலங்களித்து அதற்குப் பொலிவு தருவதுடன் நூலாசிர்டருக்குத் திருவருளையும் பொழிந்து கொண்டிருக்கின்றது. இதனுடைய மதிப்புரை இந்து ஆங்கில நாளிதழில் 23:012. வெளிவந்துள்ளது. மதிப்புரை வழங்கியவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரி வேதியியல் பேராசிரியர் S.V.அனந்த கிருஷ்ணன் சிறந்த கல்வியாளர் என்ற பெரும் புகழ் பெற்றவர். மதிப்புரை "Limitations' in Higher Education" என்ற தலைப்பில் வெளிவந்தது. இதனை வெளியிடுவதிலும் திருத்தம்செய்தலிலும் அச்சேறியபொழுது அச்சுப் படிவங்களைச் சரிபார்ப்பதிலும் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள். 2) தே.பி. 32 அதிகார சங்கிரகம் - 43