பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி 299 திரு. இராசாக் கண்ணனாரும் தமிழ் வளர்ச்சிப் பிரிவில் துணைச் செயலர் நிலையில் இருந்தவர்கள் சிறிதும் உதவாது வளவள என்று கைவிரிப்புச் செய்ததும் கல்வித் துறையில் உதவிச் செயலராகப் பணியாற்றிய தமிழ்ப் பற்று மிக்க திரு. கோ. முத்துப்பிள்ளை என்மீது கழிவிரக்கம் கொண்டு உதவ முன்வந்ததும், ஒல்லும் வகையெலாம் உதவியதும், பேரறிஞர் அண்ணா மரணப்படுக்கையில் இருந்தபோது அவருக்குத் தனிச் செயலராக இருந்த திரு சொக்கலிங்கம் IAS உண்மைநிலையை விளக்கியதும், எப்படியும் கிடைக்கும் என்று உறுதி கூறியதும், மாண்புமிகு முதல்வர் கலைஞர் கருணாநிதி காலத்தில் மானியத்திற்கு ஆணை பிறப்பிக்கப் பெற்றதும் ஒன்றன்பின் ஒன்றாகப் படலம் படலமாக, விழாக் கொட்டகையின் முன்னர் அமர்ந்திருந்த என் மனத்தில் எழுந்தன. விழாக் கொட்டகையில் அமர்ந்து கொண்டு திரு. P. திம்மாரெட்டி துறைகளைத் திறந்து வைத்தபோது கண்கள் குளமாயின. இரண்டு கன்னங்களிலும் நீர்வழியத் தொடங்கியது. அருகிலிருந்த அன்பர்கள் 'என்னவாயிற்று? ஏன் அழுகின்றீர்கள்?' என்று வினவ, "ஒன்றுமில்லை, இஃது ஆனந்தக் கண்ணிர் என்று மறுமொழி பகர்ந்து கண்ணிரைத் துடைத்துக் கொண்டேன். மேற்கு முகமாக மேடையை நோக்கி அமர்ந்திருந்தபோது வடபுறமாகப் பார்த்தபோது வேங்கடவெற்பு என் கண்ணில் படுகின்றது. "திருவேங்கடமாமலை, ஒன்றுமே தொழ நம்வினை ஒயுமே" என்ற நம்மாழ்வார் வாக்கு நினைவிற்கு வருகின்றது. உடனே என் மனம் தேசிகனின் பாசுரத்தில் ஈடுபடுகின்றது. "கண்ணனடி யிணையெமக்குக் காட்டும் வெற்பு கடுவினையர் இருவரையும் கடியும் வெற்பு திண்ணமிகு வீடென்னத் திகழும் வெற்பு: தெளிந்தபெருந் தீர்த்தங்கள் திகழும் வெற்பு; 18 நான் இதற்கு உதவப் போவதில்லை" என்று பல இடங்களில் பறை சாற்றியதும் என் காதில் விழத்தான் செய்தது. 19 திருவாய் 33 : 8