பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 நீங்காத நினைவுகள் "வருவதுதானே வரும்" "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என் பொன்மொழிகள் பொய்யாகுமா? என்ன? - நினைவு 11 : ஒருசில நாட்களில் புதிதாகத் தொடங்கப் பெற்ற தமிழ், சட்டம், மானிடஇயல், அரசியல் என்ற நான்கு துறைகட்கும் திறப்பு விழா எடுக்கப்பெற்று மிக்க கோலாகலமாக நடைபெற்றது. ஒரே மேடையில் நான்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றனவாக நினைவு. நான்கு அமைச்சர்கள் பங்கு கொண்டனர். திரு. விசய பாஸ்கர ரெட்டி, திரு. திம்மாரெட்டி ஆகிய இருவர்தாம் நினைவுக்கு வருகின்றனர். திரு. P. திம்மாரெட்டிதான் துறைகளைத் திறந்து வைத்தார். இதற்குக் கல்வெட்டுச் சான்றும் உள்ளது. டாக்டர் ஜகந்நாதரெட்டி எந்த விழாவாக இருந்தாலும் மிகச் சிறிய விவரங்களிலும் தம் கவனத்தைச் செலுத்தி மிகச் சிறப்புடன் பொலி யச் செய்வார். விழா அக்டோபர் 25 1970 இல் நடைபெற்றது. விழா நடைபெற்ற அன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மகிழ்ச்சிக் கடலில் மிதந்திருப்பர். இஃது அவரவர் இருக்கும் நிலையைப் பொறுத்தது. புதிதாகத் தொடங்கப்பெற்ற நான்கு துறைகளில் தமிழ்த்துறையைத் தவிர மூன்று துறைகளும் "சுகப்பிரசவத்தில்" பிறந்தவை. தமிழ்த்துறை ஒன்றுதான், ஆயுதப் பிரசவம் போல் அமைந்தது. ஏறக்குறைய பத்தாண்டுகள் குழந்தை கருவில் வளர்வதற்குப் பத்துத் திங்கள் தான் சென்னைத் "தமிழ்ப் பயணமும்" ஏற்க்குறைய இக்காலத்தில் எடுத்த 100 நாட்கள் விடுப்பும், சில ஆயிரம் ரூபாய் சொந்தப்பொறுப்பில் ஏற்ற செலவும், தலைமைச் செயலகத்தில் வட்டமிட்டதும், "கண்மூடி மெளனியாக நிற்கும் ஏழுமலையானின்" திருவுள்ளத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். படமுடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்" என்ற மனநிலை ஏற்பட்டபோது எம்பெருமான் திருவருள் சுரந்தது. ஒருமுறை மானியம் பெறுவதற்குத் தமிழக அரசுக்கு விண்ணப்டம் அனுப்ப மறுத்ததும் பதிவாளர் K.S.S சுப்பராஜூ அப்போது துணைவேந்தராக இருந்த டாக்டர் W.C. வாமன்ராவ் அனுப்பச் செய்ததும், (பெரும் புலவர் மு.ரா. பெருமாள் முதலியாரும்.