பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 - நீங்காத நினைவுகள் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்" என்று வள்ளுவர் வாக்கை அறியாது செயற்பட்டார். சினம் பலி க்குமிடத்தில் காத்துக் கொள்பவரே சினம் காப்பவர். இஃது அருளுடையவர் செயல் பாரதியாரும், - - சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற்சுட்டுத் செத்திடுவார் ஒப்பாவார்; சினங்கொள் வார்தாம் மனங்கொண்டு தம்கழுத்தைத் தாமே வெட்ட வாள்கொண்டு கிழித்திடுவார் மானுவாராம்" என்று கூறியுள்ளார். சினம் கொள்ளும்போது குருதியும் கொதிக்கும்; இதைக் கூட மருத்துவ நிபுணராகிய டாக்டர் ரெட்டி அறியவில்லையே கூட்டத்தைச் சமாளிப்பதற்கு உளவியல் உண்மை தெரிந்திருக்க வேண்டும். பொறுமையுடன் பேசினால் படமெடுத்தாடும் நாகப்பாம்பு மகுடிக்குமுன் பணிவதுபோல் சீறியெழும் மாணவர்கள் பணிந்து விடுவார்கள். ஆனால் டாக்டர் ரெட்டி என்ன செய்தார்? நீங்கள் உங்கள் தாடி வளர்ந்துநரை காணும் வரையில் பேராடினாலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது: பணிய வைக்க முடியாது. வெளியே நடங்கள் என்றார். மாணவர்கள் கீழே ஓடிவந்தார்கள் வாயிற்படியில் நின்ற காரை நொறுக்கி நொங்க வைத்தார்கள். பெட்ரோலைத் திறந்து விட்டுக் காரைத் தீக்கரையாக்க நினைத்தார்கள். ஒருவர் கையிலும் தீப்பெட்டி இல்லை. அதற்குள் பணியாளர்களில் சில்ர் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள். இதற்குள் தேர்வுகள் தள்ளி வைக்கப்பெற்ற செய்தியும் பரவியது கொந்தளிப்பும் அடங்கியது. கட்டில்கள் வேண்டுமென்று மாணாக்கர்கள் வேலை நிறுத்தம் தொடங்க நினைத்தபோது டாக்டர் W.C. வாமன்ராவ் இவருக்கு முன்னிருந்த துணைவேந்தர் சமாளித்ததை நேரில் கண்டேன். டாக்டர் ஜகந்நாத ரெட்டி முடிவு எடுத்த பிறகும் அதைச் சொல்லாமல் சீறி எழுந்ததையும் கண்டேன். கடுமையாக உழைத்தால் மட்டும் 27. குறள் - 305 28 பாக, சுயசரிதை பாரதி அறுபத்தாறு - 8