பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் P. ஜகந்நாத ரெட்டி - 315 போதாது. மனிதருக்கு இங்கிதம் வேண்டும். ஒருவரது ஆணவமலம் (டாக்டர் ரெட்டியிடம் இது நிறைய உண்டு செயற்படத் தொடங்கினால் அறிவு செயற்படுவதை அது மறைத்து விடும் என்ற சித்தாந்த உண்மையை நினைத்துக் கொண்டேன். டாக்டர் ரெட்டித் தம்மைத் துணைவேந்தர் என்று 24 மணிநேரமும் மார்பு நெறித்துக் கொண்டிருப்பவர் ஒரு சமயம் அவர் துணைவியாரிடம் "தாத்தா, பேரன், பேத்திமாரிடம் அன்புடன் கொஞ்சுவாரா?" என்று வினவினேன். அவர்கள். "நீங்க ஒண்ணு. அவர் உம்மா மூஞ்சுடன் விரைப்பாக இருப்பதால் பிள்ளைகள் அவரை நெருங்குவதில்லை" என்றார்கள். "ஆணவமலத்தின் திருவிளையாடல் இது" என்று சொன்னேன். பிறிதொரு சமயம் நான் ஒரு சொந்த விஷயமாகப் புதுச்சேரி முதல்வர் பதவியில் இல்லை திரு V. வேங்கடசுப்பா ரெட்டியாரைப் பார்க்க வேண்டியிருந்தது. அவருக்கு நான் அறிமுகம் இல்லை. "டாக்டர் ஜகந்நாத ரெட்டி புதுச்சேரியில் இருந்தவராயிற்றே. அவரிடம் ஓர் அறிமுகக் கடிதம் பரிந்துரை அன்று பெற்றுப் போனால் பயனுடையதாக இருக்கும்" என்று கருதி ஓர் அறிமுகக் கடிதம் கேட்டேன். அவர் மார்பு நெறித்த நிலையில் நீங்கள் ஒரு துணைவேந்தரிடம் அறிமுகக் கடிதம் கேட்கிறீர்களா?" என்றார். "ஆம், டாக்டர் ஜகந்நாத ரெட்டியிடம், பரிந்துரைக் கடிதம் அன்று: அறிமுகக் கடிதம்" என்றேன். துணைவேந்தர் தாரார்" என்றார். நான் தங்கள்கீழ்ப் பணியாற்றி வருவதால் தருவீர்கள் என்று வந்தேன். போகட்டும் தங்களைவிட மிக உயர்ந்தவரிடம் பெற்றுக் கொள்வேன். மறுத்தமைக்கு நன்றி" என்று சொல்லி விடைபெற்றேன். "இஃதெல்லாம் ஆணவமலத்தின் வெளிப்பாடு" என்று நினைத்துக் கொண்டேன். - - - நினைவு 19 : "சட்டப்படி நடப்பவர்" என்று பெயர் வாங்கின டாக்டர் ரெட்டி சமயோசிதப்படி நடந்து கொள்ளாத பிறகு அவர் புகழ் இறங்கு முகமாயிற்று அழியாத பழிகளைத் தேடிக் கொண்டார். பல்கலைக்கழக வாழ்க்கையின் இறுதிக்காலத்தில்