பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 நீங்காத நினைவுகள் அவரை யாரும மதிப்பதில்லை விடைபெறு விழாவுக்காக இவரை எவரும் அணுகினதாகத் தெரியவில்லை. என்ன செய்வது? இவர் நிலை இப்படி? முதல் துணைவேந்தர் கோவிந்த ராஜுலு நாயுடு அவர்கட்கு சிறந்ததோர் விழா எடுத்து, நினைவுச் சின்னம் நல்கி விடை கொடுத்தனர் பல்கலைகழக ஆசிரியர்கள். இரண்டாம் துணைவேந்தர் டாக்டர் W.C. வாமன்ரால் பதவியைத் துறக்க வேண்டிய நாளில் ஐதராபாத்திலிருந்தார். தொ.பே. மூலம் தம் பொறுப்பைக் கழற்றிக் கொண்டார். ஆசிரியர்கள் விடைபெறு விழாவிற்கு வருமாறு வேண்டினார்கள். அவர் நன்றியுடன் இயலாமையைத் தெரிவித்துக் கொண்டுவிட்டார். பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பல்வேறு வக்ைகளில் பாடுபட்ட துணைவேந்தர் டாக்டர் ரெட்டிக்கு வழியனுப்பாத செயலுக்கு எவரும் வருந்தாமலிரார். - நினைவு 20 : மனத்தூய்மைக்குப் பெயர்போன டாக்டர் ரெட்டியின் செயல் (பதவி விலகுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கொண்டது அசுரத் தன்மையுடையது. இறையருள்தான் இச்செயலைக் குலைத்து செயலரையும் செயலுக்கு உட்படுத்தப் பெற்றவர்களையும் காத்தது - கண்ணன் பஞ்ச பாண்டவர்களை ஒரு நெருக்கடியான நிலையில் காத்தது போல். அவசர காலநிலை அமுலில் இருந்த சமயம், தத்துவத்துறை துணைப் பேராசிரியர் டாக்டர் ஹெர்பர்ட் மானிட இயல் துறைத் துணைப் பேராசிரியர் முனிரத்னம் ரெட்டி இந்தித்துறைப் பேராசிரியர் துறைத்தலைவர் டாக்டர் S.T. நாசிம்மாசாரியார் அடியேன்” ஆகிய நால்வரையும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்வதற்குப் பரிந்துரைக்குமாறு 29 இக்காரணத்தால்தான் அவர் ஆர்வத்துடன் நிறுவிய கலையரங்கத்திற்கு 'ஜகந்நாத ரெட்டி கலையரங்கம்" என்ற பெயர் சூட்ட மறுத்துவிட்டது பல்கலைக்கழக நிர்வாகம் என்று கருதவேண்டியுள்ளது. 30 இவர்கள் மூவரும் உள்ளுர் அரசியலில் (Local Politics) சம்பந்தப்பட்டிருக்கலாம். 31 நான் உண்டு. என் வேலையுண்டு" என்று இருப்பவன் என்னை ஏன் சேர்க்கார் என்பகை தளகிக்க மia : வில்லை.