பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 - நீங்காத நினைவுகள் பெற்றது. முடிவு எடுக்கப் பெறாமல் பலமாதங்கள் தம்பித்தது. கம்பன் அடிப்பொடி இதனை நன்கு அறிவார். இந்நிலையில் அறிவியல் - சமூக இயல் சிந்தனை என் மனத்தில் எழுகின்றது. தகுதியானவை பிழைத்து வாழும்" என்பது டார்வின் என்ற அறிவியலறிஞர் கண்டவிதி. இந்த விதியை வைத்துக் கொண்டு உயிர்ப் பிராணிகளின் வாழ்க்கைச் சரிதத்தை விளக்குவர் அந்த அறிவியலறிஞர். இவையெல்லாம் இயற்பியல் சூழ்நிலைக்குப் (Physical environment) பொருந்தும் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து வந்த மனிதனுக்கும் பொருந்தும், ஆறறிவு படைத்த மனிதன் படிப்படியாக வளர்ந்து நாகரிக ஏணியில் உயர்ந்த நிலையை அடைந்த பிறகும் இந்த விதி வேறொரு வகையில் செயற்படுகின்றது. விரும்பத் தகாத முறையிலும் செயற்படுகின்றது. இந்நிலையில் அறிஞர்கள் தோன்றி நீதிநூல்களை வகுத்து நல்லனவற்றைக் கடைப்பிடிக்கவும் அல்லனவற்றைப் புறக்கணிக்கவும் வழி செய்துள்ளனர். கடவுள், சமயம், நம்பிக்கைகள், பிறப்பு - இறப்புபற்றிய கொள்கைகள், இவ்வுலகம், உம்பர் உலகம், இறை உலகம் - என்பவை பற்றியெல்லாம் நிறைய நூல்களை எழுதி மன்பதை உய்வதற்கு வழி செய்துள்ளனர். ஆயின், இவையெல்லாம் பெரும்பாலோருக்குப் பொருந்துவதில்லை. ஒருவன் பாய்க்குள் புகுந்தால் மற்றொருவன் கோலத்திற்குள் புகுகின்றான். இத்தகையவர்களை நன்னெறியில் உய்க்க வேண்டுமாயின் அந்த இறைவன்தான் காப்பாற்ற வேண்டும். : மனிதன் கண்ட தத்துவங்களெல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக" என்று சொல்லும் கொள்கை அளவில்தான் தலைநிமிர்ந்து செயற்படுகின்றது. இந்தக் கொள்கையும் விநோதமாகச் செயற்படுகின்றது. வல்லரசுகள் மெல்லரசுகள் முதலியவை யெல்லாம் கூட இந்தக் கொள்கையின் பரிணாம விநோதங்கள்தாம். இந்த உயர்ந்த சிந்தனையை விட்டுக் குறுகிய வாழ்க்கை வட்டத்திற்கு வருவோம். சாதாரண பணிவகையில் கூட விதிகள் வகுக்கப்பெற்று அவை நடைமுறைப் படுத்தப் பெறுகின்றன. இந்நிலையிலும் போட்டி பொறாமை, வயிற்றிலடித்தல், சீட்டு கிழித்தல், தண்டனை முறைகள் எல்லாம் தாமாக எழுகின்றன: