பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Kw.A.M. இராமநாதன் செட்டியார் 487 என்ற நம்மாழ்வாரின் திருவாக்கால் இதனை அறியலாம். எம்பெருமானைச் சரணம் அடைந்தவர்க்கு இறைவன் உடனே வீடுபேறு அளித்து விடுவதில்லை. நுகர்வினையை இவ்வுடல் அநுபவித்துத் தீரும் வரைக் காத்திருத்தல் வேண்டும் என்பது இதன் கருத்து. ஆனால் ஒரு நிர்வாகத்தில் ஒருவருக்கு மேல்நிலையி லிருப்பவர்கள் - ஏன்? கீழ்நிலையில் இருப்பவர்களும் கூடத்தான் - செய்யும் வினை உடன் பணியாற்றுவோரையும் பாதிக்கின்றது. ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்கினால் இவ்வுண்மை புலனாகாமல் போகாது. வள்ளல் அழகப்பர் இருந்தபோது பள்ளி கல்லூரி விஷயங்களில் அவரே. முடிவு எடுப்பார். மேலாளர் அதனைத் தாளாளருக்கு நாசூக்காகத் தெரிவித்து அவரைக் கலப்பதுபோல் பேசி பிறகு அவரிடம் கையெழுத்து வாங்குவதே முறை. மாறாக, தாளாளரை மதியாமல் கடிதங்களில் கையெழுத்து மட்டிலும் வாங்கினால் தன்மானமுள்ள வருக்கு எப்படித் தாளாளர் பதவியிலிருப்பதற்கு மனம் ஒப்பும்? மேலாளர் தம்மிடம் நடந்து கொள்ளும் முறையும் பிறவும் தமக்கு ஒத்துவராததால் வள்ளல் அழகப்பர் இருக்கும்போதே K.M.A.M.இராமநாதன் செட்டியார் தாளாளர் பதவியிலிருந்து தம்மை, விடுவித்துக் கொண்டார். அழகப்பர் அறம் நிதி நெருக்கடியி லிருந்தபோது தம் சொந்தப் பணத்தை இலட்சக் கணக்கில் உதவி வந்தார். தம்மைத் தாளாளர் பதவியிலிருந்து விடுவித்துக் கொண்டதும் இத்தகைய நிதி உதவிகளையும் நிறுத்திக் கொள்வதுதானே இயல்பு? இதனால் தாம் அழகப்பர் அறத்தின்மீது வைத்திருந்த பற்றும் குறைந்தது. ஆனால் இந்த நிலையை வெளிக் காட்டிக் கொள்ளாது எப்பொழுதும் போலவே இயங்கி வந்தது. இவர்தம் சிறந்த பண்ப்ாட்டுக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு, மனிதநேயம் இவர்தம் பிறவிக் குணமாக இருந்து வந்தது. . நினைவு 2 : பதவி உயர்வுப் போட்டியில் "ஓர் அவதூறு செய்தியைக் கிளப்பி என் போட்டிக்குத் தடைக்கல் எழுப்பப்