பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

警器懿 நீங்காத நினைவுகள் செல்வராதலால் நெஞ்சுக்கு உகப்பாகும் நாவுக்கரசர் பெருமானின் திருப்பாடலுடன் இவர் தொடர்பு தொடங்கப் பெறுகின்றது. இவர் வள்ளல் இராம. அழகப்பரின் ஒன்று விட்ட சகோதரர் (Cousin), காரைக்குடிக்கு அருகிலுள்ள கோட்டையூரைச் சேர்ந்த பெருமகன். அழகப்ப அறத்தின் நிரந்தர உறுப்பினர். தொடக்கத்தில் சில ஆண்டுகள் அந்த அறத்தின் செயலராகவும் பள்ளி கல்லூரிகளின் தாளாளராகவும் (Correspondent) பணியாற்றிப் பெரும் புகழ் பெற்றவர். இயல்பாகவே சத்துவ குணம் மிக்கவர் எவரிடமும் இனிமையாகப் பேசுபவர். அதிர்ந்து பேசுவதை நிர்வாகத்தின் கீழ்ப்பணியாற்றுவோர் கண்டதில்லை என்று சொல்லுவதுண்டு. அக்காலத்தில் எவரும் ஐயா" என்றே இவரைக் குறிப்பிடுவர். தமிழ்க் கடல் இராய சொக்கலிங்கம் கூட இவரை 'ஐயா" என்று குறிப்பிடுவதுடன் ஒருபடி மேலே சென்று எல்லோருக்கும் ஐயாவாக இருப்பவர்" என்று கூறுவதையும், அவர்தம் சில நூல்களில் குறிப்பிட்டெழுதுவதையும் அக்காலத்தில் உள்ளோர் அனைவரும் அறிவர். வள்ளல் அழகப்பரே எல்லாக் கூட்டங்களிலும் இவரைக் குறிப்பிட்டு விளிக்கும்போது “My dear gody cousin" என்றே குறிப்பிடுவார். இங்ங்னம் எல்லோருக்கும் ஐயாவாக இருந்த் டெரியார்" என் மனத்தில் நீங்காத நினைவுகளாக இடம் பெறுகின்றார். {35ö一合Q} - நினைவு - 1 : அவரவர் செய்யும் வினை அவரவரையே சாரும் என்பது இறைவன் விதித்த விதித்திட்டம். இதனால்தான் நுகர் வினையை பிராரப்தத்தை ஆருயிர் துய்க்கும்போது இறைவன் அதில் தலையிட்டுத் "தெய்விக முறையைக் கெடுப்பதில்லை. சரணமாகும் தனதாள் அடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்' தாள்-திருவடி) 2 திருவாய், 9.105