பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్టేజ్డ్ நீங்காத நினைவுகள் அழகப்பர் கலைக் கல்லூரி, அழகப்பர் உடற்பயிற்சிக் கல்லூரி, அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, அழகப்பர் பொறியியற் கல்லூரி, அழகப்பர் பாலிடெக்னிக் என்ற ஐந்து கல்லூரிகளும், கல்லூரிகட்குப் பல உணவு விடுதிகளும் இருந்தன. ஒவ்வொரு நிறுவனத் தலைவர்களும் அவரவர் பொறுப்பிலுள்ள வங்கிக் கணக்குகளில் ஒவ்வொரு கணக்கிலும் (1) பாங்கி இருப்பு (2) கையிருப்புத் தொகைகளைக் குறிப்பிட்டு வெள்ளிதோறும் பணம் பற்றிய அறிக்கைகளைத் தாளாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனுப்பினார். இதனால் பலருக்கு எலும்பிலேயே சுரம் கண்டது. கலைக் கல்லூரி முதல்வர் ஏ.என்தம்பி 1. "எங்கள்மீது ஐயப்படுவதுபோல் தோன்றுகிறதே! உங்கள் சுற்றறிக்கை" என்றாராம். அதற்குத் திரு. செட்டியார், "நான் யார்மீதும் ஐயப்படவில்லை. ஒரு முறையை நடைமுறைப் படுத்துகிறேன் என்றாராம். தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான தொகை வங்கியில் செலுத்தப்படாமல், கையிருப்பில் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உணவு விடுதி மேலாளர் ஒருவர் ரூபாய் பன்னிரண்டாயிரத்தைத் தம் மகள் திருமணத்திற்குப் பயன்படுத்தியிருப்பதாகவும் அறிகிறேன். முதல்வர் என்ற முறையில் தங்கட்குப் பொறுப்பு உண்டு. ஆனால் இவற்றை எல்லாம் சரிபார்க்க நேரம் இராது. சுற்றறிக்கையில் கண்ட முறையைக் கடைப்பிடித்தால் தவறுதல்கள் நடைபெற வாய்ப்பு இராது என்றும் கூறினாராம். இந்த முறை சிறந்தது. தவறு இருப்பின் தணிக்கையில் தவறு செய்பவர் அகப்பட்டுக் கொள்வர். இது தவிர வசூல் தொகையில் செலவு கூடாது. தேவையான ரூ. 1000/- அல்லது ரூ. 2000/- நிரந்தர முன்பணமாக வைத்துக் கொண்டு செலவு செய்யலாம். அந்தந்த மாதம் செலவு செய்த தொகைக்கு காசோலை மூலம் பணம் எடுத்துக்கொண்ட்ால் நிரந்தர முன்பணம் அப்படியே இருக்கும். செலவுகட்கு உறுதிச் சீட்டுகள் (wouchers) வைத்துக் கொள்ளும் முறையும் இருக்கவேண்டும். இம்முறையைக் கடைப்பிடித்தால் பணவிஷயத்தில் எந்தவித தவறுதல்களும் நேரிடாமல் இருக்க வாய்ப்பு இருக்கும். இஃது துறையூரில் என் நிர்வாகத்தில் கடைப்பிடித்த முறையாகும்.