பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ேW.C.T.V. வேங்கடாசலம் செட்டியார் 33 வளரும் அேதிகமாக இருப்பவர் பொறியியலில் பயிற்சி பெற்றால் அவர் பெரிய பொறியியல் வல்லுநராக வளரும் வாய்ப்பினைப் பெறுவர். யிேன் அளவு குறைவாக இருப்பின் அவர் ஒரு தொழில் முதல்வர் (Foreman) அளவுதான் வளர முடியும். பொது வாழ்க்கையில் கல்லாதவர்களும் கற்றவர்களும் பல்வேறு துறைகளில் தாம் ஆற்றும் பணிகளில் அவரவர்தம் திறமை வேறுபாடுகளைக் காண்கின்றோம். - . భీడి ఢి ఫి வள்ளல் அழகப்பர் உயிரோடு இருந்தபொழுதே திரு. K.V.A.M. இராமநாதன் செட்டியார் அழகப்பர் அறத்தின் செயலாளர் பொறுப்பையும், பள்ளி கல்லூரிகளின் தாளாளர் பொறுப்பையும் கழற்றிக் கொண்டார். அந்த இடத்தில் அறத்தின் உறுப்பினராக இருந்த திரு. C.W.CTV, வேங்கடாசலம் செட்டியார் நியமிக்கப் பெற்றார். இவர் செட்டிநாட்டு அரசர் சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் மாப்பிள்ளை. உயர்நிலைப் பள்ளி, கல்லூரிப் படிப்பு அதிகம் இல்லாவிடினும் நிர்வாகத்தில் தலைசிறந்தவர் என்ற புகழ் இவருக்கு உண்டு. அக்காலத்தில் அறிவுக் கூர்மையுடையவர் என்று எல்லோராலும் பாராட்டப்பெற்றவர். பல ஆண்டுகள் இந்தியன் வங்கி இயக்குநராகவும் இராமநாதபுரம் மாவட்ட வாரியத் தலைவராகவும் (District Board President) பணியாற்றிப் பெரும் புகழ் பெற்றவர். அலுவலக நட்ைமுறைகளையும் அங்குப் பணியாற்றும் பல்வேறு நிலை ஊழியர்களின் பணிமுறைகளையும் நன்கு தெளிந்தவர். அழகப்பர் அறத்தின் செயல் பொறுப்பையும் பள்ளி, கல்லூரித் தாளாளர் பொறுப்பையும் மிகச் சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார் என்பதை அக்காலத்தில் பணியாற்றிய நான் நன்கு அறிவேன். நினைவு 1 : பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக நிர்வாகத்தில் உள்ள முதல் ஒட்டையை அடைத்தார். அழகப்பர் அறத்தின்கீழ் அழகப்பர் மாண்டிச்சோரி பள்ளி, அழகப்பர் தொடக்கநிலைப் பள்ளி, அழகப்பர் முன்னேற்பாட்டுப் பள்ளி, அழகப்பர் மாதிரி உயர்நிலைப் பள்ளி என்ற நான்கு பள்ளிகளும்,