பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12| திரு. C.W.C.T.V. வேங்கடாசலம் செட்டியார் அறிவுஅற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகாது அரண் என்பது வள்ளுவம், மானிடர்களாகப் பிறந்தவர்கள் அனைவருக்கும் இறைவனால் நல்கப் பெற்றது அறிவு எல்லோருக்கும் இஃது ஒரே அளவில் இருப்பதில்லை. கற்றவர்களையும் கல்லாதவர்களையும் கூர்ந்து நோக்கினால் இவ்வுண்மை தெளிவாகும். தார்ன்டைக் (Thorndike) என்ற மேனாட்டுக் கல்வி வல்லுநர் இந்த அறிவுபற்றி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் இறைவனால் நல்கப் ப்ெற்ற ஒருவருடைய அறிவு, G = S, +S, it S, +S, ... . . . . S 箕 என்ற சமன்பாட்டில் அமைந்திருப்பதாகக் கருதுவார். இதில் ே என்பது பொது அறிவைக் குறிக்கும் காரணிகை (Factor). இஃது ஆளுக்கு ஆள் தரத்தில், அளவில், வேறுபட்டிருப்பது. S, S, S, ... என்பன ஒருவருடைய கணிதத் திறமை, இலக்கியத் திறமை, பொறியியல் திறமை, இசைத் திறமை, ஒவியத் திறமை முதலிய வற்றைக் குறிக்கும்.G பயிற்சியால் மிகுவதில்லை. S, S, , S, * - - - என்பவை பயிற்சியால் பெருகி வளரும், யிேன் தன்மைக்கேற்ப, S , S, , S, ... பெருகும் அளவும் மாறுபடும். ஒருவரிடம் ே அதிகமாக அமைந்திருந்தால் S, S, .... முதலியவையும் பெருகி o குறள். - 421