பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#95 - நீங்காத நினைவுகள் போது, ரெட்டியார் பதவி உயர்வு இழுபறியாகக் கிடக்கின்றது. தடைக்கல் எழுப்பப்பெற்ற செய்திகளை எல்லாம் அறிந்து கொண்டேன். வள்ளல் அழகப்பர் நல்ல நல்லவர்களையெல்லாம் தேர்ந்தெடுத்து நியமனம் செய்திருக்கின்றார். உங்கள் காலத்தில் அவர்கட்குத் தொல்லை கொடுத்து மனம் நோகச் செய்யாதீர்கள். உடனே ரெட்டியாருக்குப் பதவி உயர்வு ஆணை அனுப்புங்கள். ஆணையின் நகலை வானுர்தி அஞ்சல் வழி எனக்கு அனுப்புங்கள். நான் மலேசியா சென்றதும் முதலில் இந்த ஆணையின் நகலைப் ட்ார்க்கவேண்டும். அப்படியில்லையானால் இதே காரணத்தைக் கூறி நிர்வாக சுமையிலிருந்து விலகிக் கொள்ள நேரிடும் என்று கூறியதாக எனக்குத் தெரிந்தது. இறையருள் இப்படியெல்லாம் செயற்படுவதை எண்ணும்போது மயிர்க் கூச்செறிகின்றது. "ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே" என்ற அப்பர் வாக்கை நினைத்துக் கொண்டேன். நினைவு - 3 1958-இல் கோலாலம்பூர் மலேசியா) பல்கலைக் கழகத்திலிருந்து தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு விளம்பரம் ஒன்றுவந்தது. நான் காரைக்குடியில் அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். மிகச் சிறந்த முறையில் விண்ணப்பம் வானூர்தி அஞ்சல் தாளில் (Air Mai Paper) அச்சிட்டு அச்சிட்ட சான்றிதழ்கள். நன்னடத்தை சான்றிதழ்கள், எழுதி வெளியிட்ட நூல்கள்பற்றி இதழ்களில் வந்த மதிப்புரைகள் முதலியவற்றுடன் அனுப்பிவைத்தேன் ஆறு படிகள் K.W.A.M. இராமநாதன் செட்டியார் அவர்கள் அப்போது கோலாலம்பூரில் இருந்தார்கள். அவர்கள் எனக்கு அனுப்பிய தகவலின்படி கிடைக்கும் போலிருந்தது. எனக்கு என் மனைவி, என் தாயார், இரு குழந்தைகள், இருவர்கட்குப் பயண அனுமதிச் சீட்டு கடவுச் சீட்டு - Passport)கள் கூட வாங்கி வைத்திருந்தேன். இதன் குழுப்பட்டி (Panel) இலண்டனில் தயாரிக்கப்பட்டது என்றும் அந்தப் பட்டியில் என் பெயர் முதலில் இருக்கிறதென்றும், 99% கிடைக்கும் என்றும் K.V.A.M. இராமநாதன் செட்டியார்