பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C.A.C.T.V. வேங்கடாசலம் செட்டியார் #37 ஒரு சமயம் கேரள முதலமைச்சர் நம்பூதிரி பாடு பொதுவுடைமைக் கட்சி காரைக்குடிக்கு வருகை புரிந்திருந்தார். அவருக்குக் கல்லூரி எல்லாவற்றையும் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தார் தாளாளர் திரு. C.W.C.T.V.வேங்கடாசலம் செட்டியார், திரு. சா.கணேசன் கட்சி வேற்றுமையின்றி எல்லாப் பெரியார்களுடன் நன்கு பழகுபவராதலாலும், அழகப்பர் அறத்தின் முக்கிய உறுப்பினராதலாலும் அவரும் நம்பூதிரிப்பாடுடன் வந்து கொண்டிருந்தார். வேறு முக்கியமான சிலரும் கும்பலாக வந்து கொண்டிருந்தனர். இந்தக் கூட்டம் பயிற்சிக் கல்லூரிக்கு வந்தபோது நேராகச் செட்டியாரவர்கள் முதலமைச்சர் நம்பூதிரிபாடை என் அறைக்கு இட்டு வந்து என்னை முதலமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தது எனக்கு வியப்பினை விளைவித்தது. இவர்தான் தமிழ்ப் பேராசிரியர் திரு. ந. சுப்புரெட்டியார், சிறந்த தமிழறிஞர். பல இதழ்கட்குக் கட்டுரைகளை வழங்குபவர். பல துறைநூல்களின் ஆசிரியர் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். இப்போது அணுவைப்பற்றி நூல் எழுதிக் கொண்டிருப்பவர். இவரால் கல்லூரிக்கு நல்ல பெயர். மாணவர்களிடம் செல்வாக்கு மிக்கவர்" என்று அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு நானும் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டேன். இச்சமயத்தில் சா.க. அவர்கள் தாளாளரிடம் "திரு. ரெட்டியாரின் "பதவி உயர்வு இழுபறியாகக் கிடக்கின்றதே" என்று சொல்ல, அவரும் இதனை விரைவில் முடிக்க வேண்டும்" என்று பதில் உரைத்தார். தாளாளரும், திரு. சா.க. வும் கருத்து வேறுபாடுடையவர்கள். இதற்காகத் தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டால் காரியத்திற்குக் குந்தகம் விளைந்து விடுமோ என்று எச்சரிக்கையாக இருந்து "சந்தடிவாக்கில் கந்தகப்பொடி காற்பணம்" என்றாற்போல பட்டும் படாதவாறு சொல்லிவைத்தார். இறையருள் இருந்தமையால் காரியம் பழமாயிற்று. எல்லோரும் பின்னர் முதல்வர் அலுவலகத்திற்குச் சென்றோம். ஏனைய பேராசிரியர்களும் வந்து சேர்ந்தனர். எல்லோரையும் தாளாள்ர் கேரள முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிறகு, கூட்டம் வேறு நிறுவனத்தை நோக்கிச் சென்றது. - -