பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#98 х நீங்காத நினைவுகள் நினைவு 4 : செட்டி நாட்டுப் பகுதியில், வேறு செல்வச் செழிப்புள்ளவர்கள் வாழும் பகுதிகளில் பல்வேறு மூடப் பழக்கங்கள் நிலவி வருவதைக் காணலாம். செட்டி நாட்டுப் பகுதியில் நிலவி வரும் பழக்கம் ஒன்று உண்டு. ஆண்களில் சிலர் நவரத்தின மோதிரங்களையும் பெண்களில் சிலர் நவரத்தின டாலர்களையும் அணிந்து வருவது வழக்கமாக இருந்தது. நவரத்தினங்களாவன: lossoflá;5th (Ruby), Liguorub (Coral), @@Isruh (Diamond). LDT3,5Löušana (Emerald) ancu(Sflub (Lapis latzuli), pág (Pearl), išaoš5ću (Sapphire), GarGlossib (Sardоух). Lisieursto (Topaz) Grcitusa. இவை ஒன்பதும் ஒன்பது கோள்கட்குக் குறியீடுகள். ஒவ்வொரு கோளுக்கும் இது இது என்ற கணக்கும் உண்டு. மோதிரத்தில் இவை கோயில்களில் கோள்கள் அமைந்திருப்பதைப்போல் அமையுமாறு கட்டப்பெற்றிருக்கும். இத்தகைய மோதிரத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்கட்கு "கிரகதோஷம்" இராது என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்துவருகின்றது. இங்ங்னமே நவரத்தின டாலர் தரித்துக் கொண்டிருக்கும் மகளிருக்கும் கிரக தோஷம்" இராது என்று நம்புகின்றனர். இதைப்போலவே பச்சை அல்லது நீலக்கல் ஒன்று இல்லத்தில் இருந்தால் "அதிர்ஷ்டம்" இருந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. நாலும் தெரிந்த திரு. சி.வி.சிடிவி, வேங்கடாசலம் செட்டியாரிடமும் இந்த நம்பிக்கை இருந்து வந்தது. காரைக்குடியில் இருந்தபோது நான் வழக்கமாக மாலை நேரத்தில் அமரும் கடையொன்றில் M.S. இராசமாணிக்கம் செட்டியார் இதனைச் சொன்னார். காரைக்குடியில் எமகாதகத் தரகர் ஒருவர் உண்டு. அவர் உங்கள் சி.வி.சி.டி.வி.யையே மசிய வைத்து ஏமாற்றிவிட்டார்" என்றார். அந்தத் தரகரே என்னிடம் "MSR பாருங்கள். இன்று ஒரு பெரிய நபரை ஓர் அமுக்கு அமுக்கி விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கானாடு காத்தான் (செட்டிநாட்டின் பெயர் என்றார். அவரிடம் 2%.அங்குல நீளம் 1% அங்குலம் அகலம் ஓர் அங்குலம் கனம் உள்ள ஒருபச்சைக்கல் இருந்தது. இதனை அவர் சி.வி.சிடிவியின் தலையில் கட்டவே