பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c.W.C.T.V. வேங்கடாசலம் செட்டியார் 205 அனைவரும் அதிர்ந்து போயினர். நானும் வியந்து போனேன். தாளாளர் செட்டியார் மணியனை நோக்கி, மணியன், ரெட்டியாரின் பதவி உயர்வு வீணாக இரண்டாண்டுகளாக இழுபறியாகிவிட்டது. K.V.A.M. இராமநாதன் செட்டியார் இச்சமயம் மலேயாவுக்குக் குடும்பத்துடன் செல்லுகின்றார். கப்பலில் போவதாகச் சொன்னார். பயணம் சொல்லிக்கொள்ள என் இல்லத்திற்கு வந்தபோது "ரெட்டியாரின் பதவி உயர்வு இரண்டாண்டுகளாக இழுபறியாகக் கிடக்கின்றது. உடனே பதவி உயர்வுக்கு ஆணைபிறப்பித்து, அந்த ஆணையின் நகல் ஒன்றை ARMAட தபாலில் எனக்கு அனுப்பு வேண்டியது. கப்பலில் செல்லும் நான் என் இல்லத்தில் புகும்போது ரெட்டியாரின் பதவி உயர்வின் ஆணையின் நகல் என் மேசையின்மீது காத்திருக்க வேண்டும். அஃது இல்லாவிடில் நான் அறக்கட்டளையின் உறுப்பினர் பதவியை இதையே காரணம் காட்டி இராஜினாமா செய்து CABLE மூலம் அல்லது TELEX மூலம் தெரிவித்து விடுவேன்" என்று சொல்லிப்போனார். 'அதனால் நீ இப்போது உடனே உன் கையாலேயே ஆணையைத் தட்டச்சு செய்து 4 படிகள் எடு, முதல் வேலையாக ஒரு நகலை மலேயாவுக்கு அனுப்பி விடு" என்று கூறியவர் என் பக்கம் திரும்பி, "மிஸ்டர் ரெட்டியார், பிற்பகல் எத்தனை மணிக்கு வகுப்புக்குப் போகின்றீர்?" என்று கேட்டார். நான் "பிற்பகல் 2.15க்கு" என்றேன். மீண்டும் மணியனை நோக்கி இன்று முற்பகலில் சேர்ந்ததாக ஆணையைத் தட்டச்சு செய்து, அவர் வகுப்பிற்குப் போவதற்கு முன்னர் அவர் கைக்குக் கிடைக்கச் செய்க" என்று கூறி அருகிலிருந்த முதல்வரைப் பார்த்து, முதலியார். இதற்கு முன்னுரிமை தந்து கவனிக்கவும் என்று கேட்டுக் கொண்டார். இப்படி நாடகபாணியில் என் பதவி உயர்வு வந்தது. என் உள்ளத்தில் அந்தர்யாமாமியாக இருக்கும் ஏழுமலையப்பனே இவ்வாறு செய்வித்தான்" என்பது என் அதிராத நம்பிக்கை. நானும் அன்று 215 க்குப் பேராசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். நினைவு 8 : ஒரு சமயம் அலெக்ஸாண்டர் ஞானமுத்து நான் பயிற்சிக் கல்லூரிப் பணியைத் துறந்து எம்.ஏ. உள்ள கல்லூரிப்