பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2#8 - நீங்காத நினைவுகள் பணியை ஏற்றால் விரைவில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறியதை நினைவில் கொண்டு பல இடங்கட்கு முயன்றேன். அழகப்பர் கலைக்கல்லூரியில் தமிழ் எம்.ஏ. வந்ததும் வாரத்திற்கு 4 மணி கற்பிக்கும் வாய்ப்புக் கேட்டேன். சென்னையில் இம்முறை இருப்பதைச் சுட்டிக்காட்டி திரு. ஞானமுத்து மறுத்துவிட்டார். தாளாளரிடம் முறையிட்டும் அவர் படிப்பு சம்பந்தமான விஷயத்தில் தலையிட மறுத்துவிட்டார். வாய்ப்பு கிடைத்திருந்தால் காரைக்குடியிலேயே பிஎச்டிக்குப் பதிவி செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அடுத்து மதுரை தியாகராயர் கல்லூரிக்கு திரு. இராய.சொ. பரிந்துரையின்மீது முயன்றும் கிடைக்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு மூன்று முறை முயன்று தேர்ந்தெடுக்கப்பெற்றும் கிடைக்கவில்லை. மூன்று முறையிலும் வெவ்வேறு காரணங்களால், ஒருமுறை தெலுங்கன் என்று காதோடு காதாகப் பேசப்பட்டு மறுக்கப்பட்டதை அறிந்தேன். பின்னர் பழநியில் தொடங்கப்பெற்ற பண்பாட்டுக் கலைக்கல்லூரிக்கு முதல்வர் பணிக்கு முயன்று தேர்ந்தெடுக்கப் பெற்றும் கிடைக்காதநிலை. பெரியவர் M. பக்தவத்சலம் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் தம் சாதிக்காரர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறப்போகின்றார். அவருக்குத் தரவேண்டும் என்று நிறுத்தி வைத்ததால் கிடைக்கும் பேறு பெறவில்லை. திருப்பதிப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைத்தது - எவர் பரிந்துரையும் இல்லாமல். இது எனக்குக் கிடைத்ததால் நான்தான் பொறுமையுடன் துறையை வளர்க்க முடியும் என்று கருதிதான். "ஏழுமலையான் தடுத்து ஆட்கொண்டான்" என்பதைப் பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது. திருப்பதி ஆணை பெற்றதும், இரண்டாண்டுகள் விடுமுறையும் தொடர்புரிமையும் (Lien) தருமாறு விண்ணப்பித்துத் தாளாளரையும் பார்த்துப் பேசினேன். அவரிடம் "நான் திருப்பதி போவது பி.எச் டி பட்டம் பெறுவதற்காக தமிழகத்தில், பல்கலைக்கழகத்தில் என்னை அப்பட்டத்திற்கு பதிவு செய்து கொள்ளவே மறுத்துவிட்டனர். விதிகளை வைத்துக்கொண்டு விளையாடுகின்றனர். அஃது என்