பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cw.cா. வேங்கடாசலம் செட்டியார் 267 தலைவிதியாகி இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். தயவு செய்து என் வேண்டுகோளை நல்கவேண்டும், ஜூலை 31 திங்கள் (1960) புறப்படுவதற்கேற்றவாறு என்னைப் பொறுப்பிலிருந்து கழற்றி விடவேண்டும்' என்று கேட்டேன். அவரும் என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவ்வாறும் செய்தார். ஆனால் ஒன்று சொன்னார். நீங்கள் இங்கிருந்தால் 1966இல் முதலியார் விலகின பிறகு ஓய்வு அப்பதவியை உமக்கு உறுதியாகத் தருகின்றேன்" என்றார். நானும் பிஎச்டி பட்டம் பெற்றதும் திரும்பி விடுகின்றேன். ஒருகால் திரும்பும் சூழ்நிலை இல்லாது அங்கேயே தங்கிவிட்டால், ஒய்வு பெற்றதும் காரைக்குடி வந்து விடுகிறேன். வீடு இங்கு வாங்கியுள்ளேன். புதுநகர் (New Town) அருகில் இரண்டுமனையும் வாங்கியுள்ளேன். அப்போது ஒர் ஐந்தாண்டுகட்கு முதல்வர் பணி தாருங்கள். ஊதியம் இன்றி வள்ளல் நிறுவனத்தில் ஊழியம் புரிய உறுதி கூறுகின்றேன்" என்று கூறினேன். அவரும் மகிழ்ந்து அவ்வாறே செய்யலாம்" என்று தெரிவித்தார். இறையருள் வேறுவிதமாக நடந்ததை யாரால் அறியமுடியும்? ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு ஒன்று ஆகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்’ என்ற பாட்டியின் வாக்கோடு நீங்காத நினைவு நிறைவுபெறுகிறது. இவர் பிறந்தநாளும் இறந்த நாளும் அறியக்கூடவில்லை. அதனால் இறுதியில் குறிப்பிட வாய்ப்பு இல்லாது போய்விட்டது. 4. இது நடைபெற வாய்ப்பு இல்லை. பல்லாண்டுகட்கு முன்னர் நான் திருப்பதியில் இருந்தபோதே தாளாளர் செட்டியார் திருநாடு அலங்கரித்துவிட்டார். இப்போது பயிற்சிக் கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைந்துவிட்டது. நானும் 1978 சனவரி 14 திங்கள் முதல் சென்னையில் குடியேறி விட்டேன். எண் எண்ணமும் . தாளாளர் எண்ணமும் இறைவன் திட்டத்தில் சேரவில்லை. - 4 நல்வழி - 27