பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நீங்காத நினைவுகள் நினைவு 1 மாதிரிப் பள்ளியில் ஒருநாள் குமரகுருபரரின் மீனாட்சியம்மைக் குறத்திலுள்ள ஒரு பாடலை ஐந்தாம் படிவ மாணவர்கட்கு இக்காலத்தில் 10-ஆம் வகுப்பு நடத்தியதைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். முதல்வர் ப. துரைக்கண்ணு முதலியார் பேராசிரியர் S.திருவேங்கடாச்சாரி ஆகிய இருவரையும் மற்றும் எல்லாத் தமிழ் வகுப்பு ஆசிரிய மாணவர்களையும் இப்பாடத்தைக் கவனிக்குமாறு ஏற்பாடு செய்தேன். பாடல் இது கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்கு கல்லி எடுப்போம். குறிஞ்சிமலர் தெரிந்து முல்லைக் கொடியில் வைத்துத் தொடுப்போம்; பழம்பிழிந்த கொழுஞ்சாறும் - தேறலும்வாய் மடுப்போம்; பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம்; செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம்; சினவேங்கைப் புலித்தோலின் பாயலின்கண் படுப்போம்; எழுந்துகயற் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம்; எங்கள் குறக் குடிக்கடுத்த இயம்பிதுகாண் அம்மே. - பாடக்குறிப்பில் மீனாட்சிசுந்தரம் "கருந்துணர்ந்து கவிதை இன்பத்தை நுகருமாறு செய்தல்" என்பதைப் பாட நோக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். - -- மாணாக்கர்களைப் பாடத்தின்மீது ஊக்குவிக்க வேண்டும் என்பது பயிற்சிக்கல்லூரியில் சொல்லப்பெற்ற விதி. இதனை ஆசிரியர்கள் பல்வேறு வகையில் கையாளலாம். பாடினவர்களின்