பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி சுந்தரம் 21 i பொருள் பொருள் நயத்திற்குத் துணையாக இருப்பது அச்சிட்ட நூல்களில் காணப்பெறும் சொற்கள் அரை உயிரோடுதான் உள்ளன. நாம் ஊட்டுகின்ற ஒசையின் மூலம்தான் எஞ்சிய அரை உயிரும் முற்றுப் பெறுகின்றது. ஆகவே, ஓசையை ஊட்டித்தான் பாடல்களைப் படிக்கவேண்டும். இடத்திற்கேற்றவாறு சந்தர்ப்பத்தையொட்டி, இசையூட்டிப் படித்தால்தான் பாக்களில் அடக்கி வைக்கப் பெற்றுள்ள உணர்ச்சி வெள்ளம் பீறிட்டுக் கொண்டு வெளிவரும் சொற்களின் பொருளுடன் அவற்றின் தொனிப் பொருளும் கட்டவிழ்த்துக் கொண்டு புறப்படும். தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் "பா என்பது, சேட் புறத்திலிருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஒதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற் கேதுவாகிப் பரந்து பட்டுச் சொல்வதோர் ஓசை' என்று குறிப்பிடுவார். இதனால் பா என்பது இசை மயமாக இருப்பதொன்று என்பது பெறப்படுகின்றதன்றோ? - : மேல் நாட்டு நூல்களிலிருந்தும் நம் நாட்டு நூல்களிலிருந்தும் பல கருத்துகளைத் தெரிந்து கொண்டு கவிதைபயிற்றும் முறையைப் பற்றிப் பலவாறு சிந்திக்கும் வாய்ப்புகள் பெற நேர்ந்தது. இக்கருத்துகளை முதன்முதலாகக் காரைக்குடியில் பயிற்சிக்கல்லூரி மாணவர்கட்குக் கற்பித்தேன். சிறிய வகுப்பாதலால் கலந்து யோசிக்கும் சந்தர்ப்பங்களும் இருந்தன. பல நல்ல மாணாக்கர்கட்குக் கற்பிக்கும் பேறும் கிடைத்தது. பல நல்ல மாணாக்கர்கள் இருப்பினும் மீனாட்சி சுந்தரம் என்பவர் மட்டிலும் நீங்காத நினைவாக உள்ளார். அவர் இப்போது இல்லை. வைகுண்டவாசியாகி விட்டார். 4 Words are but half alive when they appear in a printed page" - Prof. - Garrod 5 தொல், பொருள் - செய்யுள் நூற் 1 பேராசிரியம் 6 இக்கருத்துகளை முறையாகத் தொகுத்து"கவிதை பயிற்றும் முறை" என்ற தனிநூலாகவும் வெளியிட்டுள்ளேன். "தமிழ் பயிற்றுமுறை" என்ற என் பெரிய நூலிலும் தெளிவாகவும், சுருக்கமாகவும் விளக்கப் பெற்றுள்ளன.