பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2% of நீங்காத நினைவுகள் முறையிலேயே உறிஞ்சிப் பருகினேன் அற்புதமான 'பழ அநுபவம்" பெற்றேன். அப்போது டிகேசி. அவர்களின் நினைவு வந்தது. டி.கே.சி. ஒரு பாடலை பலமுறை படித்து - இல்லை பாடி இறுதியில் மிகக் கம்பீரமாகப் பாடி கேட்போரைப் பாட்டநுபவத்தின் கொடுமுடிக்கு இட்டுச் செல்வதை நினைத்துக் கொண்டேன். மாம்பழச் சாறும் டி.கே.சி தரும் கவிதைச் சாறும் ஒன்றுபோல் இருந்து இன்னும் என்னை மனத்தால் சுவைக்க வைக்கின்றது. 1941-50 ஆண்டுகளில் நான் துறையூரில் பணியாற்றியபோது திருவீர. உலக ஊழியனார் நான் அமைத்த இலக்கியக் கூட்டங்களில் கம்பராமாயணப் பாடல்களில் கம்பராமாயணப் பாடல்களை இப்படித்தானே பாடிப் பார்வையாளர்கட்கு கவியமுதம் ஊட்டினார் என்பது நினைவிற்கு வருகின்றது. அங்ங்னமே 1943 டிசம்பரில் மயிலையில் பன்மொழிப்புலவர் வே.வேங்கடராஜூலு ரெட்டியார் இல்லத்தில் அகநானூறு களிற்றியானைப் பகுதியிலுள்ள ஐம்பது பாடல்களை முத்து சு. மாணிக்கவாசக முதலியார் இப்படித்தானே எனக்குக் கற்பித்தார் என்பதும் நினைவிற்கு வருகின்றது. . நான் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றியபோது தமிழ் கற்பித்தலில் உயிராகிய பகுதி கவிதை பயிற்றுவதுதான் என்பதை வற்புறுத்திக் கூறுவதுண்டு. கவிதை பயிற்றும் ஆசிரியர்கள் கவிதைகளை வாய்விட்டு இசையுடன் படிக்கும் பழக்கம் உடையவர்களாக இருத்தல் வேண்டும் பழக்கம் இல்லாதவர்கள் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளல் வேண்டும். இதனை நான் பயிற்சி பெறும் ஆசிரியர்களிடம் வற்புறுத்திக் கூறுவேன். 'மனக்கண்" என்று ஒன்றிருப்பதுபோலவே "மனக்காதும்" (Minds ear) நம்மிடம் அமைந்து கிடக்கின்றது. சொற்களுக்கு இரண்டு குணங்கள் உண்டு. ஒன்று ஒலி பாட்டின் ஒலிநயத்திற்குத் துணை செய்வது மற்றொன்று, 3 இலக்கணம் கற்பித்தலும் மிக முக்கியமானதுதான். எடுத்துக்காட்டுகளைக் கொண்டு இலக்கண விதிகளைச் சுவையாக விளக்கவேண்டும். உரைநடை கற்பிக்கும்போது பல்வேறு வித வாக்கிய அமைப்புகளை எடுத்துக் கொண்டு கற்பிக்கவேண்டும் . இவற்றையும் பயிலும் ஆசிரியர்கட்கு விளக்குவதை உயிராய பணியாகக் கொண்டிருந்தேன்.