பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி சுந்தரம் 2:39 கற்பித்த ஆசிரியர் பயிற்சி மாணாக்கர் ஒருவர் நீங்காத நினைவில் இடம் பெறுகின்றார். இவர் பெயர் மீனாட்சி சுந்தரம் மதுரை மாவட்டம் அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர் 1956-57 இல் என்னிடம் பயன்றதாக நினைவு. இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் சென்னைத் தலைமைச் செயலகத்தில் பத்தாண்டுகட்குமேல் பணியாற்றி பகுதி அலுவலர் (Section Officer) பதவி தம் மனநிலைக்கு ஒவ்வாமையால் தம்மை அதனின்றும் விடுவித்துக் கொண்டு ஆசிரியர் பயிற்சிக்கு (8.T) வந்தவர். நிட்டைப் பயிற்சியுடையவர். தாம் அடிக்கடி இறைமைக் காட்சிகளைக் கண்டு அநுபவித்ததாகக் கூறுவார். குழந்தை மனம் உடையவர். வகுப்பில் நன்றாகக் கவனித்துக் குறிப்புகளை எழுதிக் கொள்வார். நூலகத்தில் அதிகமான கற்பிக்கும் முறைகளைப் பற்றிய நூல்களைப் படிப்பார்: மிகச் சிறந்த ஆசிரியராகத் திகழும் அரிய கூறுகளை இவரிடம் கண்டேன். நான் திருப்பதியில் பணியாற்றிய பொழுது 1960-77 நேரிட்ட நிகழ்ச்சியொன்று நினைவிற்கு வருகின்றது. ஒருசமயம் நெல்லூருக்கு ஓர் அலுவல் நிமித்தம் சென்றிருந்தேன். அது சூன் மாதம், ஆந்திர நண்பர் ஒரு பழ விருந்து அளித்தார். விருந்து சாமானியமானதுதான். ஆயினும் அது என் மனத்தில் நீங்காத நினைவாக நிலைபெற்றுள்ளது. இரண்டு வெள்ளித்தட்டுகளில் தட்டுக்கு ஒன்றாக இரண்டு மாங்கனிகளை வேலையாள் ஒருவன் எங்கள் முன்னிலையில் உள்ள மேசையின்மீது வைத்தான். நண்பர் பழத்தை எடுத்துக்கொண்டு. அதைத் தடவிக் கொண்டே நெருடினார். என்னை நோக்கித் தினண்டி தின்னுங்கள்) என்றார். நான் கத்தி ஒன்று வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் நண்பர் பழத்தின் அடிப்புறத்திலிருந்த காம்பை நீக்கித் தொளையிட்டுப் பழச்சாற்றை அப்படியே உறிஞ்சிப் பருகினார். பழச்சாற்றினைப் பருகின முறை என்னை வியக்க வைத்தது. பின்னர் எங்கள் முன் இருக்கும் பழம் இரச வர்க்கத்தைச் சேர்ந்தது என்றும், இந்த வகைப் பழத்தை இப்படித்தான் உண்ணவேண்டும் என்றும் விளக்கினார். பின்னர் நானும் அவ்விதமே பழத்தை நெருடி அதன் சாற்றை அவர் பருகின