பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி சுந்தரம் . 247 நினைவு 5 இவர் நிட்டைப் பயிற்சியுடையவர் என்று முன்னரே குறிப்பிட்டேன். அருப்புக்கோட்டையில் இது மிகவும் தீவிரமடைந்தது போலும், 1966 முடிய என் குடும்பம் காரைக்குடியிலேயே இருந்து வந்தமையால் விடுமுறைக் காலங்களில் காரைக்குடியிலிருப்பேன். அவ்வப்போதெல்லாம் இவரைப்பற்றி விசாரிக்கத் தவறேன். ஏழெட்டு ஆண்டுகள் இவர் அருப்புக்கோட்டையில் பணியாற்றினார் என்பது கேள்வியுற்றேன். நிட்டைப் பயிற்சி தீவிரமடைந்த நிலையில் இவர்தம் இறுதிக்காலம் கழிந்திருக்கவேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஊர்ப்பெருமக்கள் இவரைப் "பைத்தியம் என்று அறுதியிட்டனராம் பக்தர்களையும் தியானசீலர்களையும் மக்கள் இப்ப்டித்தான் அறுதியிடுவார்கள். உண்மையான பக்தர்கள் ஆண்டவன்மீது மால்கொண்டு ஒழிவார்கள். . மால்எழுந் தொழிந்தேன் என்தன் மாலுக்கே 3 . 2) என்பர் குலசேகரப்பெருமாள். இன்னும் அவர், "நாரணன் நரகாந்தகன் பித்தனே' (3) "மாமணவாளன் தன் பித்தனே' (5) “எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே' (6) "பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே" (7) "பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே" (8 என்றெல்லாம் கூறி தம்மைப் "தனிப்பெரும் பித்தானாய்க்" (0) கருதிப் பெருமைப்படுகின்றார். - х மீனாட்சி சுந்திரம் நல்ல ஆளுமையுடையவர். பார்ப்பதற்கு எடுப்பான வசீகரத் தோற்றம் உடையவர். திருமணம் ஆனவரா 한