பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 நீங்காத நினைவுகள் பேராசிரியர் வெள்ளைவாரணனார் நன்றாக அநுபவித்ததைக் கண்டேன். அடிக்கடி தலையை ஆட்டியாட்டி அநுபவித்துக் கொண்டிருந்தார். கூட்டம் முடிந்த பிறகு அவரிடம், "நன்றாக இசையை அநுபவித்தீர்கள். தலையை அடிக்கடி ஆட்டிக் கொண்டே அநுபவித்ததைக் கண்டேன். உங்கட்கு பண், தாளம் முதலியவை தெரியுமா? இனங்கண்டு அநுபவிக்க முடியுமா? என்ற வினவினேன். அதற்கு அவர் நீங்க ஒண்ணு. ஏதோ ஒரளவு தெரியும். இனங்கண்டு கொள்ளும் அளவுக்கு இசை ஞானம் எனக்கு இல்லை. ஆயினும் தலையை ஆட்டினால் பாடுவோருக்கு உற்சாகம் ஏற்பட்டு இன்னும் நன்றாகப் பாடுவார் அல்லவா?" என்றார். என்ன வெள்ளைமனம்? நினைவு 4 : திருப்பதியிலிருந்தபோது சென்னைப் பல்கலைக்கழகத்தினின்றும் சைவசித்தாந்தம்பற்றி ஒப்படைப்பு ஒன்று எழுதித்தர வேண்டிய பணி ஒன்று வந்தது. அது வந்த காலத்தில் சித்தாந்தம்பற்றி அடியேனுக்குத் தெளிவு. இல்லை. இருந்தாலும் பணியை மறுக்காமல் எழுதித்தர ஆசை. ஏதோ எழுதினேன். அதனைச் சரிபார்த்துக் கொள்வதற்காக திருப்பதியிலிருந்து சிதம்பரம் போந்தேன். 142, கனகசபை நகரிலுள்ள பேராசிரியர் இல்லத்தில் இரண்டு இரவுகள் ஒரு பகல் தங்கியதாக நினைவு. பல்வேறு ஐயங்களை அகற்றிக் கொண்டேன். என் பணியையும் நிறைவு செய்து கொண்டேன். தில்லைச்சிற்றம்பலவன் திருக்கோயில் செல்ல ஆசை பேராசிரியர் என்னை இட்டுச் சென்றார். இதற்கு முன்னர் பல தடவை பார்த்து சேவித்திருந்தாலும் இப்போது பேராசிரியருடன் சென்று சேவித்தபோது பல செய்திகளை அறிந்து மன நிறைவு கொண்டேன். இதுகாறும் வந்த போதெல்லாம் எதனையும் கருதாது கோயிலை வலம் வருதல், ஆடலரசனைச் சேவித்தல், விபூதி சந்தனம் பெறல் முதலியவை சடங்குபோல் நடைபெற்று வந்தன. இப்போதைய நடைமுறை மாறுபட்டதாக அமைந்தது. ஒரு சமயம் திருவனந்தபுரம் அனந்தசயன சேவையின்போது பிள்ளைத் திருநறையூர் அரையரும், பராசரபட்டரும், திருமாளிகைகளையும், திருக்கோபுரங்களையும்