பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 . நீங்காத நினைவுகள் எதிரிலுள்ள கொடிமரத்திற்குச் சிறிது தென்பால் உள்ளது. இங்கு ஊர்த்துவதாண்டவ மூர்த்தியைக் கற்சிலை வடிவில் சேவித்து மகிழலாம். மிகவும் சித்திரவேலைப்பாடு அமைந்த ஐம்பத்தாறு தூண்களால் தாங்கப் பெற்றது மண்டபம், குதிரைப் பூட்டிய தேர் அமைப்பைப் பெற்றுள்ளது. 15 இராஜசபை இஃது ஆயிரங்கால் மண்டபம், இது கோவிலுனுள் வடகிழக்குத் திசையில் உள்ளது. நடராசப் பெருமான் ஆண்டில் ஆனியிலும், மார்கழியிலும் இருமுறை இவண் எழுந்தருள்கின்றார். இம்மண்டபத்தின் நீளம் 340 அடி அகலம் 190 அடி மண்டலத் தூண்கள் வரிசைக்கு இருபத்து நான்காக 4 வரிசைகள் உள்ளன. நடுவில் வெளவால் நத்தி மண்டபம் அமைக்கப் பெற்றுள்ளதால் ஐம்பத்தாறு தூண்கள் குறைவென்றும் ஆதலால் மண்டபத்தின் வெளியிலுள்ள தூண்களையும் சேர்த்து எண்ணிக்கை கொள்வர். இது தேவாசிரிய மண்டபமுமாகும். இராஜசபைக்கு அருகில் தொன்மைக் கோயிற்குளமாகிய சிவகங்கைத் தீர்த்தம் உள்ளது. நீளம் 160 அடி அகலம் 100 அடி இஃது அழகிய சுற்றுமாளிகையைக் கொண்டது. பண்டைத் தமிழர் பாரதத்தையே விராட் புருடனாகக் கருதி சிவத்தலங்களைக் கொண்டு அதனை விளக்கும் ஒரு மரபும் உண்டு. திருவாரூர் அதன் மூலாதாரம் திருவானைக்கா அதன் கொப்பூழ், திருவண்ணாமலை மணிபூரகம்: திருக்காளத்தி கண்டம்: காசி புருவத்தின் நடுஇடம். சிதம்பரம் இதயம் ஆதலின் இறைவனது இயக்கமாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்ற ஐந்தொழில்களும் ஆடலரசனின் ஆனந்தத் தாண்டவத்தில் அமைந்திருப்பது வியக்கத்தக்க தத்துவமாகத் திகழ்கின்றது. சிற்றம்பலத்தின் மேலுள்ள தூபி ஏனைய தலங்களில் உள்ளது போன்றதன்று. சாதாரண வீடுகளுக்குள்ள கூரை போன்றது 21600 தங்க ஓடுகளால் ஆனது. ஒவ்வொரு ஒட்டிலும் சிவாய நம: என்ற ஐந்தெழுத்து மந்திரம் எழுதப் பெற்றுள்ளதாக தில்லையுலா குறிப்பிடுகின்றது. ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 24 மணிநேரம் கொண்ட ஒரு நாளுக்கு 21600 மூச்சு ஆகின்றது. இதுதான் தங்க டுைகளின் மொத்த எண்ணிக்கை. இவ்வாறு கோயிலமைப்பிற்குத்