பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. வெள்ளைவாரணனார் 227 தத்துவங்கள் கூறப் பெறுகின்றன. இப்படிப் பலசெய்திகள் வெள்ளை வாரணனார் மூலம் அறிய முடிந்தது. இந்த சிவநேசச் செல்வர். சித்தாந்தக் களஞ்சியம்போல் எனக்கு அடிக்கடிப் பயன்பட்டார். நினைவு - 5. 1977 ஆண்டு என் மணிவிழா ஆண்டு. திருப்பதி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் மிகச் சிறிய அளவில் என் மணிவிழா கொண்டாடப் பெற்றது. அதனையொட்டி மணிவிழா மலர் ஒன்று கொணரத் திட்டமிட்டனர் ஆசிரியர்களும் மாணவர்களும். வாழ்த்து செய்தி கேட்டு பல பெரியார்கட்கு வேண்டுகோள் விடுக்கப்பெற்றது. வெள்ளைவாரணனாரையும் கேட்டனர். அப்போது அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் துணைப்பேராசிரியர். தமது வாழ்ந்துச் செய்தியை ஐந்து பாடல்களாக அனுப்பினார். அவை : திருவளரும் பரதகண்டம் நிலமகளின் திலகமெனத் திகழத் தெய்வ அருள்வளரும் வேங்கடமும் அழகுதிகழ் குமரியுமென் றமைத்த சீர்த்தித் தெருள்வளரும் தமிழகத்தே செந்தமிழ்த் திறம்வளர்க்கும் திருவி னோருள் ஒருவரெனத் திகழ்சுப்பு ரெட்டியார் - தமிழ்த்தொண்டின் உரவோ ராவார். சோணாடில் சைவநலந் திகழிரட்டி யார்மரபின் தோன்ற லாகிச் சேணாட்டோர் ஆங்கிலமும் செந்தமிழும் பயின்றுதிகழ் புலமை யெய்தி நாணாளும் தமிழ்மொழியில் அறிவியல்நூல் பலவியற்றி நாடு போற்ற வீணாட்கள் படாதுதம் வாழ்நாட்கள் தமிழ்க்கெனவே உழைக்கும் வீரர்.