பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 நீங்காத நினைவுகள் துறையூரில் உயர்பள்ளித் தலைமையா சிரியராய்த் தூய பண்பின் இறையருளாற் காரைநகர் ஆசிரியக் கல்லூரி எழில்பெற் றோங்க உரைதருபே ராசிரிய னெனவுயர்ந்து வேங்கடவ னருளால் உள்ளம் நிறைவுபெற வேங்கடப்பல் கலைக்கழக தமிழ்த்துறையில் நிலவும் செல்வர் உழைப்பினால் உயர்வதுவே உரவோர்தஞ் செயலெனவே உலகு போற்றப் பிழைப்பினா லன்றியே பேரூழைப்பால் தமிழ்த்துறையின் பெற்றி நாட்டி அழைப்பினால் நல்லறிஞர் பேரவையைத் திருப்பதியில் அமைத்து நன்னூல் இழைப்பினால் டாக்டர்என இயல்பட்டம் பெற்றுமகிழ் இனிய நண்பர். சுப்புரெட்டி யாரெனவே தூயதமி ழறிஞரெல்லாம் போற்ற நாளும் ஒப்பிலாத் தமிழ்ப்பணிசெய் திருவாளா உழைப்பினுக்கோர் உருவ மாக இப்புவியோர் பாராட்ட விளங்குபே ராசிரியர் இமையா முக்கண் அப்பனரு ளால்மக்கள் சுற்றமுடன் நீடுழி யமர்ந்து வாழி' நினைவு 6 : "திருவளர்செல்வர்கள் என்ற நான்கு நூல்களில் நாவுக்கரசர் (1986) என்ற என் நூலை சிறப்புப் பாயிர 6 மணிவிழா மலல் 197 - பக். 46