பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. வெள்ளைவாரணனார் 229 மாலை" ஒன்றினால் வாழ்த்துமாறு வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு 22 பாடல்கள் எழுதி வாழ்த்தியுள்ளார் அவற்றுள் சில : நன்றுடையான் வீற்றிருக்கும் சிராப்பள்ளி வட்டத்து நல்லோர் வாழும் தொன்றுமுதிர் பதியின்கண் இரட்டியார் தொன்மரபில் வந்த தோன்றல் குன்றெனுஞ்சீர்ப் பெருங்குணத்தான் குறைவிலா நல்லுளத்தான் கோதொன் றில்லாத் தென்றமிழ்தேர் பேராசான் சுப்புரெட்டி யாரென்றும் செல்வ னாவான் (1) பலகலையும் பயின்றுணர்ந்த பண்பாளன் அன்பாளன் பாரோர் போற்றும் நிலையுடைய சான்றாண்மைக் கிலக்கியமாய் நிலவுபுகழ்க் குரிசில் நெஞ்சின் நலமொன்றே பெருஞ்செல்வ மெனக்கொண்டு நாடும்.கிழ் நலத்தால் நாளும் - புலவருள மகிழ்கூர வேண்டுவன புரிந்துவக்கும் புலமைச் செல்வன் (3) ஆசிரியப் பயிற்சிபெற விழைவோருக் காமுறையின் அறிவு நூல்கள் மாசிரியப் பயிற்றுவளர் மாணவர்கள் மதிநலத்தால் வளம்பெற் றோங்கத் தேசுமிகு நூலியற்றித் தேர்ச்சிபெறச் செய்துவக்கும் திறத்தான் "யார்க்கும் ஆசிரியன இவன்"என்ன அறிஞரெலாம் பாராட்டும் ஆற்றல் வாய்ந்தான் (5) பிறமொழியில்தோன்றிவளர் மேனாட்டின் அறிவியல்நூ லனைத்தும் பேணி