பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. வெள்ளைவாரணனார் . 231 பதிகப்பாடல் பொருள் நயமும் பண்பார் தலத்தின் வரலாறும் ஆர்வ முடனே கற்போர்கள் அறிந்து மகிழத் தக்கவண்ணம் அறமார் நாவுக் கரசரெனும் ஆய்வு நூலை அளித்தனனால், சோர்விலாமல் தமிழ்ப்பணிசெய் தோற்ற முடையான் கற்றோர்கள் சுப்புரெட்டி யாரெனும்பேர் - செப்ப விளங்கும் தூயோனே. (16) பெருமை சிறுமை கருதாது - பேரன் புடனே யாவரொடும் நெருங்கிப் பழகும் நீர்மையினான் நின்ற சொல்லும் நேர்மையினான் கருமை விரவா நெஞ்சத்தான் கற்றோர் தமக்கே நற்பணியை உரிமை செய்யும் உவப்புடையான் உயிரோ ரன்ன கேண்மையினான் (19) அயரா முயற்சி யாலறிவால் வறுமை யகற்றும் ஆற்றலான் செயிர்தீர் நட்பால் அன்பரொடு சேர்ந்து பழகும் தெளிவுடையான் மயர்வில் மனத்தான் மதிநலத்தால் மக்கள் சுற்றம் மகிழ்கூரத் துயர்தீர்ந் துலகம் வாழச்செய் தூயோன் நேயம் மிக்குடையான் (20) இந்தப் பாடல்களை அனுப்பிய பிறகு இவ்ரைச் சந்திக்கும் வாய்ப்பே இல்லை. பல அன்பர்கள்மூலம் இவர் உடல்நிலை நைந்து சீர்குலைந்து நாகப்பட்டினத்தில் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர்