பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 . - நீங்காத நினைவுகள் M. திருநாவுக்கரசு என்ற மருமகனாரின் இல்லத்தில் தங்கிச் சிகிச்சை பெற்றுவருவதை அறிந்தேன். நலமுடன் வாழ நன்றுடையானைப் பிரார்த்தித்தேன். அவர் மருகர் எழுதிய கடிதத்திலிருந்து கல்லீரலில் ஏற்பட்ட கோளாறினால் குருதி வாந்தி ஏற்பட்டு இயற்கை எய்தினார் என்று அறிந்தேன். நுகர்வினை முடிந்ததால் இறைவன் பொன்னடி சேர்ந்தார் என்பது மெய்ப்பொருளியல் உணர்த்தும் உண்மை, தத்துவ உண்மைகள் மனத்திற்கு அமைதி தருவனபோல் வேறொன்றைக் காண்டல் அரிது. பேராசிரியர் வெள்ளைவாரணனார் சத்துவகுணம் நிறைந்த தமிழ்ச் செம்மல். மதுரைப் பல்கலைக்கழகம் இந்தச் செம்மலுக்கு முத்திரையிட்டு உலகினருக்கு "தமிழ்ச் செம்மலாகப் பிரகடனப் படுத்தியது. தமிழில் ஆழ்ந்த புலமையுடைய இப்பெரும் பேராசிரியர் தொடக்கத்திலிருந்தே பல நிலைகளிலும் என்னுடைய தமிழ் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்தவர். பழகுவதற்கு இனியவர் அடக்கம் இவரது தனிச்சிறப்பு பண்புடையார் பட்டுண்டு உலகம்" என்ற வாய்மொழிக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர். உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே" என்று தொல்காப்பிய நூற்பாவிற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவ்ர் என்றும் இவர்தம் திருந்ெந்றியில் திருநீறும் சந்தனப் பொட்டும் அணிசெய்யும். இப்பெருமகனாரின் மறைவு தமிழுலகிற்குப் பேரிழப்பு. இருந்தாலும் திருக்கயிலையில் தமிழ் முருகனுடன் தமிழாய்வு செய்து கொண்டிருப்பதாக என் சிறுமணம் கருதுகின்றது. - நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு *: தோற்றம் :14.11917 കശ്ശേ186.988 7 இவர் ஒரு சமயம் தலைமைச் செயலகத்தில் ஒளவை. நடராசன் திருமாளிகையில் அறிமுகமானார். 8 குறள், 336