பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 நீங்காத நினைவுகள் பட்ட துன்பங்கள் சொல்லுந்தரமன்று. வடமொழி, இந்தி, வரலாறு தெலுங்குத்துறைகளுக்கு உரிய அறைகள் காலியாக இருக்கும் நேரம் அறிந்து அவற்றில் வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தோம். ஆனால் தத்துவத்துறைத் தலைவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை யில்லாதவராக இருந்தமையால் அடிக்கடி ம்ோதல்கள் ஏற்பட்டன. ஒரு சமயம் தெலுங்குத் துறைத் தலைவராக இருந்த டாக்டர் G.N. ரெட்டியிடம் இந்த நிலைமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பொழுது எங்கட்குத் தேவையான பொழுதில் (Period) அவர் துறைக்கும் வகுப்பு இருந்தால், அந்தப் பொழுதில் தேவையான அறையைத் தமிழுக்கு அளித்து தம் வகுப்பு காலை 9-10 மணிக்கு நடைபெறுமாறு மாற்றிக் கொண்டார். நாங்கள் புகார் செய்தால் அவருக்குத் தலைவலி தருவதைத் தவிர அவரால் இடம் கண்டுபிடிக்க முடியாது என்பதை டாக்டர் G.N. ரெட்டியும் நானும் அறிந்தோம். மகள் வீட்டுக்கு வந்த தாய்க்கு இடம் அளித்ததில் அக்கறை கொண்ட டாக்டர் ரெட்டியை அன்றைய தமிழ்த்துறை நன்றியுடன் போற்றிக் கொண்டிருந்தது. இரண்டாண்டுளில் பி.ஏ. பி.எஸ்.சி. வகுப்புகள் நிரந்தரமாக எடுக்கப்பெற்றதால் இத்தகைய பிரச்சினை இல்லாதொழிந்தது. உருதுத் துறைத் தலைவர் “பாகிஸ்தான் மனப்பான்மையுடையவர் என்பதற்கு முன்னநுபவம் இருந்தமையால்இடவசதி கேட்டு அவர் பக்கம் தலைவைத்துக்கூடப் படுப்பதில்லை. t நினைவு - 2 : திருப்பதியில் நான் வாழ்ந்த ஆறு ஆண்டுகள் குடும்பமின்றி மாணியாய் வாழ்ந்த நிலை போது ஒரு சிறு அறையில் தங்கியிருந்தேன். "கல்யாணமாகியும் பிரம்மச்சாரி கடன் வாங்கியும் பட்டினி என்ற நிலை என்னுடையதாக இருந்தது. டாக்டர் .ெN. ரெட்டியும் அப்போது 1967 வரை திருமணம் ஆகாதவர். 40 அகவை வரை மானியாகவே இருந்தவர். நான் இருப்து அகவையிலேயே இல்லற வாழ்க்கையில் புகுந்தவன். திருப்பதியில் அவர் எங்கோ ஓர் அறையில் வாழ்ந்து வந்தார். இருவருக்கும் போக்கு வரவுக்கு ஊர்தி மிதிவண்டியே, ஏழைகளின்