பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் G.N. ரெட்டி - 239 வாகனம். பராமரிப்புச் செலவு ভণpa வைத்துக் கொள்வதற்கும் அதிக இடம் தேவை இல்லை. நாடோறும் திருப்பதியிலிருந்து பல்கலைக்கழகம் போய்வர 2 + 2 கி.மீ பயணம் செய்ய வேண்டும். பல பேராசிரியர்கள் மிதி வண்டியையே ஊர்தியாகக் கொண்டிருந்தனர். திருப்பதியிலும் காரைக்குடியிலும் நான் ஒருவனே வெயிலினின்றும் பாதுகாத்துக்கொள்ள தலையணி (Hat; கொண்டிருந்தேன். காரைக்குடியிலும் திருப்பதியிலும் ஆடையலங்கரத்திற்குக் குறைவில்லை. இடுப்பிற்குக் கீழே குழாய் உடுப்பு இடுப்பிற்கு மேலே கழுத்துவரை மூடிய நிலையில் உள்ள மேல்சட்டை (Coat) அல்லது கழுத்துப்பட்டை அணிந்த நிலையிலுள்ள மேல்சட்டை காலுக்கு காலுறையுடன் கூடிய பாதத்தை மூடிய செருப்பு வகை (Boots). இரப்பர் அடியுடன் கூடியது. தரையில் நடக்கும்போது ஒலி எழும்பாது பூனை நடைபோலிருக்கும் டாக்டர் G.N. ரெட்டியும் இப்படியே ஆடையலங்காரம் செய்து கொள்வார். பெரும்பாலும் அக்காலத்தில் எல்லோரும் இந்த முறையையே பின்பற்றியிருந்தனர். - கல்லூரியிலிருந்து மாலையில் திரும்பும்போது காந்தி சாலையிலுள்ள 'கண்ணன்' என்ற புத்தகக் கட்டமைப்போர் 'இல்லத்தில் இறங்கி ஒரு சில மணித்துளிகள் அமர்ந்திருப்பது வழக்கம். பலநூல்களைக் கட்டமைத்துக் கொள்வது என் வழக்கம் டாக்டர் G.N. ரெட்டியும் என்னைக் கண்டதும் மிதிவண்டியிலிருந்து இறங்கி உரையாடுவார். என்ன்ால் கண்ணனுக்கு .ேN. ரெட்டி நட்பு கிடைத்தது. பிறகு இருவருமாகச் சேர்ந்து திரும்புவோம். சில சமயம் இருவருமாக "ஆரோக்கிய பவன்" என்ற சிற்றுண்டிவிடுதியில் பசியாற்றிக் கொள்வோம். 7 நான் திருப்பதியில் சேர்வதற்கு முன் டாக்டர் மணவாள ராமாநுசம் என்னும் பெரியார் கல்லூரி முதல்வராக ஒரு சில ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் கல்லூரிப் பேராசிரியர்களை இரப்பர் அடியைக் கொண்ட காலணி போட்டுக் கொள்வதை வற்புறுத்துவாராம்