பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 - நீங்காத நினைவுகள் நினைவு 5 : நான் ஜூன் 1966 முதல் கபில தீர்த்தத்ச் சாலையிலுள்ள உமாபதி ரெட்டி குடியிருப்பில் ஓர் இல்லத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தேன். வேறு ஒரு குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதால் டாக்டர் G.N. ரெட்டியை வழியில் சந்திக்கும் வாய்ப்பே இல்லாது போய்விட்டது. கண்ணன் சந்திப்பும் இல்லாதொழிந்தது. 1967-இல் டாக்டர் G.N. ரெட்டியின் திருமணம் அலர்மேல்மங்காபுரத்தில் ஒரு பெரிய திருமண மண்டபத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. அனந்தப்பூரிலுள்ள ஒரு நல்ல குடும்பத்திலுள்ள எம்.ஏ. படித்த பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டார். நானும் என் துணைவியுடன் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தித் திரும்பினோம். G.N. ரெட்டியின் துணைவியாருக்கும் தேவஸ்தானப் பொறுப்பிலிருந்த கலைக்கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. இதனால் .ேN. ரெட்டி மிதிவண்டியைத் துறந்து மகிழ்வுந்தில் பயணம் செய்வதை மேற்கொண்டார். தம் துணைவியாரைக் கல்லூரியில் இறக்கி விட்டுத் தாம் மட்டிலும் பல்கலைக்கழத்திற்கு வருவதும், மாலையில் கலைக்கல்லூரிக்குச் சென்று துணைவியாரை இட்டுக் கொண்டு வீடு திரும்புவதும் அவர் வழக்கமாகி விட்டது. அப்போது பல்கலைக்கழகத்திற்கு எதிர் வரிசையிலுள்ள பேராசிரியருக்குரிய இல்லத்தில் வாழ்ந்து வந்தார். நான் திருப்பதியில் ஒய்வு பெற்றபிறகு சித்தூர் - திருப்பதி நெடுஞ்சாலையில், சாலைக்குச் சற்று உட்புறமாக அமைந்த அகன்ற இடம் ஒன்றில் சொந்தவீடு அமைத்துக் கொண்டு குடியேறி விட்டார். பல ஆசிரியர்கள் அங்குச் சொந்த இல்லங்களை அமைத்துக் கொண்டனர். - ... ' - நினைவு - 4 1970 - 71இல் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ் எம்.ஏ. தொடங்கப் பெற்றது. 1970 - டிசம்பரில் பல்கலைக் கழக வளாகத்தில் எனக்கு இல்லம் ஒதுக்கப் பெற்றது. பிரகாசம் நகரில் துணைப் பேராசிரியர்கட்கென கட்டப்பெற்ற கட்டடங்கள் ஒன்றில் அங்குள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்துக்