பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் G.N. ரெட்டி . 241 கொண்டனர் பல ஆசிரியர்கள் உள்ளுர் செல்வாக்கு நிர்வாகத்துடன் ஒட்டி உறவு கொள்ளும் தன்மை, கால்கை காக்கை பிடிக்கும் பண்பு இவை இவர்கட்குக் கைகொடுத்து உதவின. எனக்கு ஒதுக்கப் பெற்றுக் கிடைத்த இல்லம் கட்டாந்தரையில் கட்டப்பெற்ற கீழ்க்கோடியில் உள்ள இல்லம், அரை அடிக்குக் கீழ் தோண்டினால் கூழாங்கற்களும் பெரிய கற்களுமே கிடைப்பன. இதனைச் சீர்ப்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சி என்னை தோட்டக்கலை வல்லுநராக்கியது. மண்வெட்டி களைக்கொட்டு, சிறிய கடப்பாரை, வேறு சில சிறிய இரும்புக் கருவிகள், நீர்பாய்ச்சும் PVC குழாய் தயாரித்துக் கொண்டேன். சந்திரகிரிப் பக்கத்திலிருந்து வேலிக் கருவை விதைகளைச் சேகரித்துக் கொண்டேன். இல்லத்தைச் சுற்றி வேலிக்குட்பட்ட இடங்களில் அரை அடி தோண்டி வேலிக்கருவை விதைகளைப் போட்டு நீர்பாய்ச்சி வந்ததால் ஓராண்டிற்குள் ஒரடி உயரம் கருவைச் செடிகள் வளர்ந்து வேலித்தோற்றத்தைக் கொடுத்துவிட்டது. பிறகு ஆண்டுதோறும் ஆளுயரத்திற்கு ஆட்களை விட்டு வேலியாக அமைத்து அழகுபடுத்தினேன். வேளாண்மைக் குடி வழிவந்த எனக்கு இவை எல்லாம் தண்ணீர்ப் பட்டபாடு, டாக்டர் G.N. ரெட்டியும் வேளாண்மைக் குடி வழிவந்தவர். செடி கொடிகளை உயிர்போல் போற்றி வளர்ப்பவர். அரளிச் செடி, குரோட்டன்ஸ் செடி வகைகள், வாழை முதலியவைகள் அவர் வாழ்ந்த பேராசிரியர்களுக்குரிய இல்லத்தில் நிறைய இருந்தன. அவற்றையெல்லாம் வாங்கிவந்து என் இல்லத் தோட்டத்தில் நட்டு வளர்த்தேன். பல்வகை ரோஜாச் செடிகளை இரண்டு வரிசைகளில் நட்டு வளர்த்தேன். என் இளைய மகன் இராமகிருட்டிணன் (அப்போது திருப்பதி மருத்துவக் கல்லூரி மாணவன் ரோஜா செடிகளின்மீது தனி அக்கறை செலுத்தினான். ஒரே செடியில் வெவ்வேறு வண்ண ரோஜாச் செடிகளின் கிளைகளை வெட்டி ஒட்டிச் சேர்த்து வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ஊதா, ஆரஞ்சு வண்ணப் பூக்கள் தோன்றுமாறு செய்து மகிழ்ந்தான். ஒரு சமயம் டாக்டர் G.N. ரெட்டி தற்செயலாக என் இல்லத்திற்கு வந்தபோது