பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242. நீங்காத நினைவுகள் இவ்விநோதச் செடியைக் கண்டு மகிழ்ந்தார். வியந்த்ார். அவர் தந்த வாழைக் கன்றுகள் தோப்பாக வளர்ந்து குலைகள் தள்ளும் நிலையிலிருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அவர் தந்த கறிவேப்பிலைச் செடி மட்டிலும் வளராமல் பட்டுப் போயிற்று என்றும், பெங்களுரி லிருந்து என் நண்பர் பேராசிரியர் தண்.கி.வேங்கடாசலம் தந்த செடிமட்டிலும் கொழுத்து செழுமையாக வளர்ந்து பொலிவதைக் காட்டினேன். அங்ங்னமே என் அரிய நண்பர் ஆங்கிலப் பேராசிரியர் திரு. எஸ். விசுவநாதன் இல்லத்தினின்றும் பெற்று வந்த முருங்கைப் போத்துகளும் மிக நன்றாக வளர்ந்து ஒரு மீட்டர் நீளமுள்ள முருங்கைக்காய் தொங்குவதையும் G.N. ரெட்டி கண்டு மகிழ்ந்தார். நினைவு - 5 : 1972 இல் முதன் முதலாகத் தமிழ் எம்.ஏ. மாணவர்கள் பட்டம் பெற்றார்கள். இராமலிங்க வள்ளல் பெயரிலும் பொள்ளாச்சி வள்ளல் மகாலிங்கம் வழங்கிய பொருளுதவியால் நிறுவப் பெற்ற அறக்கட்டளை திருவள்ளுவர் பெயரிலும் சித்துர் வணிக வள்ளல் இராசமாணிக்கம் செட்டியார் முன் நின்று தண்டப் பெற்ற பொருளுதவியால் நிறுவப் பெற்ற அறக்கட்டளை வழங்கப் பெற்ற இரண்டு தங்கப் பதக்கங்களை முறையே டி. சாமுவேலும், தேவசங்கீதமும்தட்டிச் சென்றனர். தேவசங்கீதம் பிஎச்டிக்கு ஆய்வு செய்ய விரும்பினதால் என் மேற்பார்வையில் ஆய்வு மாணவனாகப் பதிவு செய்வித்துக் கொண்டேன். - - அக்காலத்தில் பல்கலைக்கழக மானியக் குழு (U.G.C) ஒரு பல்கலைக்கழகத்திற்கு இத்தனை பேருக்கு உதவிச் சம்பளம் (Scholarship) என வழங்கும். 1972 இல் 30 பேருக்கு வழங்கியதாக நினைவு. பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பெற்ற ஆய்வுக்குழு கலைக்கு இவ்வளவு அறிவியலுக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொள்ளுமாறு ஆணையிடும். இப்பிரிவுகளில் அடங்கியுள்ள துறைகள் ஒவ்வொருவருக்கும் இத்தனை என்று பிரித்துக் கொள்ளும். அந்த ஆண்டு தெலுங்குத்துறைக்கு மூன்று கிடைத்தனவாக நினைவு ஆய்வுக்குழு தமிழ்த்துறையைக் கணக்கிற்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவ்ே ஒன்று கூட தமிழ்த் துறைக்கு வழங்கப் பெறவில்லை.