பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் :ெN. ரெட்டி 243 டாக்டர் G.N. ரெட்டியை அணுகினேன். நான் இத்துறையை நிறுவுவதற்கு பத்தாண்டுகள் பட்டபாட்டை அவர் நன்கு அறிவார். தேவசங்கீதம் முதல் வகுப்பில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றதை எடுத்துக்கூறி ஓர் உதவிச் சம்பளச் சலுகையைத் தமிழ்த்துறைக்குத் திருப்பி விடுமாறு வேண்டினேன். ஏழை எளியவர்மீது இரக்கக் குணம் உள்ளவராதலாலும், அவர்கள் கல்வி முன்னேற்றத்திற்கு உதவவேண்டும் என்ற கொள்கையுடையவராதலாலும் ஓர் உபகாரச் சம்பளத்தைத் தமிழ்த்துறைக்கு விட்டுக்கொடுப்பதாகப் பல்கலைக்கழகத்திற்கு உடனே எழுதினார். இதனால் தேவசங்கீதத்தற்கு வாய்ப்பு கிடைத்தது. மாதம் ஐந்நூறு ரூபாய் உபகாரச் சம்பளமாகவும், ஆண்டுக்கு 1500/= ரூபாய் புத்தகம், தாள் முதலியவை வாங்கிப் பயன்படுத்துவதற்கு உதவியாகவும் வழங்கப்பெற்றன. சங்கீதத்திற்கு மூன்றாம் ஆண்டு இத்தொகைகள் ரூ. 750/- ஆகவும், ரூ. 2500 ஆகவும் உயர்ந்தனவாக நினைவு. இங்ங்ணம் பெறுவதற்கு முதற் காரணமாகத் திகழ்ந்த டாக்டர் G.N. ரெட்டியின் பெருமனம் நீங்காத நினைவாக ஈண்டுப் பதிவு பெறுகின்றது. நினைவு 6 : 1977 - செப்டம்பரில் என் மணிவிழாவை துறை ஆசிரியர்களும், மாணாக்கர்களும் கொண்டாடினர். பல பெரியார்களும் பல்கலைக்கழகப் பலதுறை ஆசிரியர்கள் வழங்கிய வாழ்த்துரைகள் ஒரு மணிவிழா மலராக வெளிவந்தது. அந்த மலருக்கு டாக்டர் G.N. ரெட்டி வழங்கிய ஆங்கில வாழ்த்துரையின் சில பகுதிகள் தமிழில் தரப்பெறுகின்றன ! ". இந்து சமய மரபில் 61-வது பிறந்தநாள் விழா என்பது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும், ஆசிரியர்களும் மாணவர்களும் டாக்டர் சுப்பு ரெட்டியாரின் நண்பர்களும் அவர்தம் மணிவிழாவைக் கொண்டாடுதல் பாராட்டப்பட வேண்டிய அறிகுறியாகும். அக்காலத் தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் ரெட்டியார் கற்றுத் துறை போய வித்தகர் - 8 அப்போது அவர் துனைமுதல்வர் பதவியை வகித்து வந்தார்.