பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 w நீங்காத நினைவுகள் - i என்பதிலும், வளமான எழுத்தாளர் என்பதிலும் தமக்கென சிறந்ததோர் இடத்தைப் புனைந்து கொண்டவர். அவருடைய எழுத்துரைகள் திறனாய்வு, கல்வி, இலக்கணம், இலக்கியம், மெய்ப்பொருள். பொதுவிருப்பார்ந்த அறிவியல் என்ற மிகவிரிந்த எல்லைகளைக் கொண்டவை. இவை தவிர பல்வேறு ஆய்வுக் கட்டுரை வழங்கிப் பெரும்புகழ் பெற்றவர். இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பவர். இவருடைய நற்பண்புகள், திறமைகள், புலமை முதலியவை இளைய தலைமுறையினரால் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. தோழ ஆசிரியர் என்ற முறையில், பேராசிரியர்கள் கல்வி சம்பந்தமான பேரார்வத்தையும், பல்வேறு இடர்ப்பாடுகளையும் தாங்கிக்கொண்டு திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவிய பாங்கையும் யான் வியந்து போற்றுகின்றேன்; பாராட்டுகின்றேன். திருவேங்கடநாதன் திருவருளால் இன்றும் பல்லாண்டுகள் வாழ்ந்து இத்தகைய இலக்கியப் பணியைத் தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன்." இங்ங்னம் என்பால் பேரன்பு கொண்டு வாழ்த்தியும், உடன்பிறவாச் சகோதரர்போல் பழகியும் வந்த பெருமகனார் வாழவேண்டிய வயதிலேயே திருநாடு அலங்கரித்தது மிகவும் வருந்தத் தக்கதாகும். நினைவு - 7 : 1984 - 87 ஆண்டுகள் டாக்டர் .ேN. ரெட்டி துணைவேந்தராகப் பணியாற்றிய காலம். நான் ஓய்வு பெற்று ஏழாண்டுகளாயின (ஒய்வு பெற்றது அக்டோபர் 24, 1977, என் பணிக்காலத்தில், டாக்டர் ). சகந்நாத ரெட்டியின் ஆட்சியில் 1969 - 75 துணைப் பேராசிரியர் பதவி வருவதிலும் அதற்குமேல் பதவி உயர்வு பெறுவதிலும் நான் பட்டபாட்டையும், ஒய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் பெறாமல் தொல்லைப் பட்டுக் கொண்டிருப்பதையும் துணை வேந்தர் டாக்டர் G.N. ரெட்டி சிந்தித்துப் பார்த்திருக்க 6 ம்ணிவிழா மலர் - பக். 32