பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் G.N. ரெட்டி 245 வேண்டும் என்பது என் நினைவு. அக்காலத்தில் துறைத்தலைவராக இருந்த என்மீது அளவுகடந்த பற்றும் பாசமும் கொண்ட டாக்டர் P. செளரிராசனும் டாக்டர் ரெட்டிக்கு என் நிலையை எடுத்துக் கூறியிருக்கக்கூடும் என யான் கருதுகிறேன். வைணவத்தையும் தமிழ் இலக்கியப் பரப்பையும் நன்கு ஆராய்ந்தவன் என்பதையும் சைவத்திலும் அத்தகைய ஈடுபாடு உண்டு என்பதையும் டாக்டர் ரெட்டி நன்கு அறிவார். 68 அகவையுடையவர் மூன்று மாத காலம் திருப்பதியில் வந்து தங்கினால் உணவு முதலியவை ஒத்துவரா என்பதையும் நன்கு தெளிந்தவர். எனினும் விருந்துப் பேராசிரியராக மூன்று மாத காலத்துக்குப் பணி புரியுமாறு ஆணை அனுப்பினார். என்னுடைய நலத்தைவிட மாணவர்களின் நலமே முக்கியம் எனக் கருதியவர் டாக்டர் ரெட்டி என்பது எனக்குப் படுகின்றது. தங்குவதற்கு விருந்தினர் மாளிகையில் இலவசமாக இடம் ஒதுக்கப் பெற்றது. ஏதோ வாய்ப்பினை ஒப்புக்கொண்டு திருப்பதிப் பணியை ஏற்றேன். - என் மனம் கருதியவற்றையும் சிந்திக்கின்றேன். மலையேறி மாலவனைக் காணாவிட்டாலும் அவன் அடிவாரத்தில் சில காலம் தங்கியிருந்தாலும் போதும் எனக்கருதினேன். சென்று சேர்த்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே” என்ற நம்மாழ்வார் வாக்கும் என்னை அப்பணியை ஒப்புக் கொள்ளுமாறு தூண்டியது. என் பிள்ளைப் பருவத்தினின்றே எம்பெருமான் ஏழுமலையான் என்னை ஆட்கொண்டர்ன் என்பதில் அதிராத நம்பிக்கையுடையவன். சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய்தந்தையும் r அவரேயினி யாவாரே' 10 திருவாய் 33 : 8 1. மேலது 51: 8